அசைவற
என்பதை இரட்டுற மொழிதலாக்கி. அசைவற இருந்து
உணர்த்திய என்றுங் கொள்க. திருவருள் முன்னின் றுணர்த்தச் சிவத்தை
யுணரு முணர்ச்சி கைகூடிற்றென்பார். நாயகன் குறிப்புளத்துணர்த்திட
வறிந்தார் என்றார். (42)
முன்ப ணிந்தன
ரணிந்தன ரஞ்சலி முடிமேல்
என்பு நெக்கிட வுருகின ரினியரா யெளிவந்
தன்பெ னும்வலைப் பட்டவ ரருள்வலைப் பட்டார்
துன்ப வெம்பவ வலையறுத் திடவந்த தொண்டர். |
(இ
- ள்.) துன்ப வெம்பவ வலை அறுத்திட வந்த தொண்டர் -
துன்பமயமாகிய கொடிய பிறவி வலையினை அறுத்தற்கு வந்த தொண்டராகிய
வாதவூரடிகள், முன்பணிந்தனர் - திருமுன்னர் வணங்கி, முடிமேல் அஞ்சலி
அணிந்தனர் - தலைமேற் கைகளைக் குவித்து, என்பு நெக்கிட உருகினர் -
என்பு நெக்குவிட உருகி, இனியராய் எளிவந்து அன்பு எனும் வலைப்பட்டவர்
- இனியராகி எளிவந்து அடியார் அன்பாகி வலையிற்பட்ட அவ்விறைவரது,
அருள் வலைப்பட்டார் - அருளாகிய வலையின்கட் பட்டனர்.
பணிந்தனர்,
அணிந்தனர், உருகினர் என்பன முற்றெச்சங்கள்;
முற்றாகவே யுரைத்தலுமாம். பின்னிரண்டடியின் நயம் மிக்க இன்பம்
விளைப்பதாகும். (43)
கால முங்கனாக்
காட்சியு *நிமித்தமுங் கடிந்தார்
சீல மாணவர் செவ்விதேர் தேசிக னென்ன
மூல வாகம மோதினான் முறுக்கவிழ் கழுநீர்
மாலை சாந்தணிந் தடியின்மேல் வன்கழல் வீக்கி. |
(இ
- ள்.) காலமும் - தீக்கைக் குரிய நல்லோரையும், கனாக்
காட்சியும் - கனாத் தோற்றமும், நிமித்தமும் - நன்னிமித்தங்களுமாகிய
இவற்றையறிந்து செய்தற்குரிய பக்குவத்தினை, கடிந்தார் சீலமாணவர்
செவ்விதேர் - நீங்கியாராகிய ஞானவொழுக்கத்தினையுடைய மாணவரது
பக்குவத்தை நன்கு அறியும், தேசிகன் என்ன - ஞானாசிரியன் என்று
அறிஞர் கூறுமாறு, மூல ஆகமம் ஓதினான் - மூலாக மங்களை அருளிச்
செய்த அவ்விறைவன், முறுக்கு அவிழ் கழுநீர்மாலை சாந்து அணிந்து -
கட்டவிழ்ந்த செங்கழுநீர் மாலையையும் சந்தனத்தையும் அணிந்து,
அடியின்மேல் வன்கழல் வீக்கி - திருவடியின்மேல் வலிய வீரக் கழலைக்
கட்டி.
காலம்
- தீக்கைக்கு விதித்தகாலம். கானாக்காட்சி - ஆசிரியன்
மாணாக்கனைப் பல முகத்தானும் சோதித்த பின்னர்த் தீக்கைக்குக் குறித்த
நாட்கு முதல் நாளிரவு தூய நிலத்தில் தருப்பைப் படுக்கையில் அவனைத்
துயிலச் செய்ய அப்போது அவன் காணும் கனவு; அது நன்றாயின்
அங்கீகரித்தும் தீதாயின் அதன் பொருட்டு ஆகமத்திற் சொல்லப்பட்ட
(பா
- ம்.) நிமித்தமுங் கருதார்.
|