வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்215



கழுவாய் புரிந்தும் தீக்கை செய்வர் என்பர். நிமித்தம் பல்லி முதலியவற்றால்
உணர்த்தப்படும் நற்சகுனம்;

"வந்துநான் வறுமை யுற்றேன் மாற்றென் திலம்பா டென்று
சிந்தையா குலமுற் றான்கைச் செழும்பொரு ளீதல் செய்வார்க்
கிந்தநா ளளிக்க வேண்டு மெனவிதி யின்மை யாலே
அந்தநா ளிந்நாளாக வடிமைகொண் டருள வேண்டி"

என்பது திருவாதவூரர் புராணம். கழுநீர் மாலை யணிந்தமை

"மூல மாகிய மும்மல மறுக்கும், தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை, யேலுடைத் தாக வெழில்பெற வணிந்து"

என அடிகள் தாமே கூறுமாற்றானும் அறியப்படும். (44)

அண்ணல் வேதிய ரொழுக்கமு மன்புங்கண் டியாக்கை
உண்ணி லாவுயிர் பொருள் புன லுடன்கவர்ந் துள்ளக்
கண்ணி னான்மலங் கழீஇப்பத கமலமுஞ் சூட்டி
வண்ண மாமலர்ச் செங்கரஞ் சென்னிமேல் வையா.

     (இ - ள்.) அண்ணல் வேதியர் - பெருமை பொருந்திய
மறையவராகிய வாதவூரடிகளின், ஒழுக்கமும் அன்பும் கண்டு -
ஞானவொழுக்கத்தினையும் அன்பினையும் பார்த்து, யாக்கை உள் நிலாவு
உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து - உடலையும் அதனுள் உலாவும்
உயிரையும் பொருளையும் தான நீருடன் ஏற்று, உள்ளக் கண்ணினால் மலம்
கழீஇ - அக நோக்கினால் மலமாசினைக் கழுவி, பத கமலமும் சூட்டி -
திருவடித் தாமரையையும் முடியிற் சூட்டி, வண்ணம் மாமலர்ச் செங்கரம் -
அழகிய தாமரை மலர்போன்ற சிவந்த திருக் கரத்தினை, சென்னிமேல்
வையா - முடியின்மேல் வைத்து.

     உள்ளக் கண்ணினால் மலங்கழீஇ என்றது மானத தீக்கை. பத
கமலமுஞ் சூட்டி என்றது திருவடி தீக்கை. செங்கரஞ் சென்னிமேல் வையா
என்றது அத்த மத்தக சையோகமெனப்படும் பரிச தீக்கை உள்ளக்
கண்ணினால் என்பதற்கு ஒளத்திரியின் ஞான தீக்கையால் என
உரைத்தலுமாம்; ஞானதீக்கைக் குரியார்க்கும் பரிச தீக்கை விலக்கின்
றென்க; தீக்கை வகைகளை,

"பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும்
     படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமும்
அலகில் சாத்திரயோக மவுத்தி ராதி
     யநேகமுள வவற்றினவுத் திரியிண்டு திறனாம்
இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தா
     லியற்றுவது கிரியையெழிற் குண்டமண்ட லாதி
நிலவுவித்துச் செய்தல் கிரியாவதிதா னின்னும்
     நிர்ப்பீசஞ் சபீசமென விரண்டாகி நிகழும்"