என்னும் சிவஞான சித்தியார்த்
திருவிருத்தத்தா லறிக. இறைவன் தம் உயிர்
உடல் பொருள்களையெல்லாம் ஏற்றருளினமையை,
"அன்றே யென்ற னாவியு முடலு முடைமை
யெல்லாமுங்
குன்றே யனையா யென்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோ ரிடையூ றெனக்குண்டோ வெண்டோண் முக்கணெம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே" |
என திருவாசகத்துள்
அடிகள் தாமே அருளிச் செய்தலானு மறிக. (45)
சூக்க மாகுமைந்
தெழுத்தினிற் சுற்றிய பாச
வீக்க நீக்கிமெய் யானந்தம் விளைநிலத் துய்த்துப்
போக்கு மீட்சியுட் புறம்பிலாப் பூரண வடிவம்
ஆக்கி னானொரு தீபகம் போல்வரு மண்ணல். |
(இ
- ள்.) சூக்குமாகும் ஐந்தெழுத்தினில் - சூக்குமமென்னும் திருவைந்
தெழுத்தின் உபதேசத்தினால், சுற்றிய பாச வீக்கம் நீக்கி - வாதவூரரைப்
பந்தித்த பாசக் கட்டினைப் போக்கி, மெய் ஆனந்தம் விளை நிலத்து
உய்த்து - அழியாத இன்பம் விளையும் நிலத்திற் செலுத்தி, போக்கு மீட்சி
உள் புறம்பு இலாப் பூரண வடிவம் ஆக்கினான் - போக்கும் வரவும்
உள்ளும் புறம்பு மில்லாத வியாபக வடிவமாகச் செய்தனன்; ஒரு
தீபகம்போல் வரும் அண்ணல் - ஒரு பார்வைபோன்று எளிவந்த இறைவன்.
பஞ்சாக்கரம்
தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூவகைப்படும்
என்றும், தூலம், சூக்குமம், காரணம், மகாகாரணம், முத்தி என ஐவகைப்படும்
என்றும் கூறுப; அவற்றுள் சூக்குமம் இங்கு உபதேசித்தமை கூறினார்; அது,
"நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்" என அடிகள்
திருவாசகத்துள் அருளிச் செய்ததாகும் என்பர். சூக்கம், பாகதச் சிதைவு.
சுற்றிய பாச வீக்கம் என்பதற்குத் திரோதாயி, ஆணவங்களை யுணர்த்தும்
இரண்டக்கரங்கள் என்பாரு முளர். கண்டவடிவன்றாகையால் போக்குமீட்சி
உட்புறம்பிலாதாயிற்று. பூரண வடிவமாக்கினான் - சிவசொரூபமாக்கினான்.
தீபகம் - பார்வை; மான் காட்டி மான் பிடிப்பார்போல வாதவூரரை
ஆட்கொள்ளுதற்குத் திருவுருக்கொண்டு வந்தனர் என்க. அண்ணல
ஆக்கினான் என முடியும். பல்வகைப் பஞ்சாக்கரங்களி னியல்பும், அவற்றை
ஓது முறையும், நிற்குமுறையும் குருமுகத்தால் அறியற்பாலன. (46)
பார்த்த
பார்வையா லிரும்புண்ட நீரெனப் பருகுந்
தீர்த்தன் றன்னையுங் குருமொழி செய்ததுந் தம்மைப்
போர்த்த பாசமுந் தம்மையு மறந்துமெய்ப் போத
மூர்த்தி யாயொன்று மறிந்திலர் வாதவூர் முனிவர். |
|