வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்219



     அகவிருளை நீக்கி ஒளிர்வன வாகலின் ‘சொன் மணியினை’ எனவும்,
ஒவ்வொரு சொல்லும் அன்பால் ஊடுருவப் பட்டிருத்தலின் ‘அன்பு
முழுதுமாகிய வடத்தினால்’ எனவும் கூறினார். வாழ்த்துள்ளும் ‘அழுதடி
யடைந்த வன்பன்’ எனக் கூறிப் போந்தமை சிந்திக்கற்பாலது. தொடுத்த
என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது; தொடுத்து அவ்வலங்கல்
எனச்சுட்டு வருவித்துரைத்தலுமாம். ஐயர் அன்பருக்கு வழுவிலாதபேர்
மாணிக்க வாசகன் என்றார் எனமுடிக்க. தீக்கையில் மாணவர்க்கு ஏற்புடைய
பெயர் ஆசிரியரால் வழங்கப்படுவதுண்டாகலின் இஃதும் அங்ஙனம் வழங்கப்
பெற்ற பெயரென்க. (50)

பாட்டிற் கின்புறு குருபரன் பாதமேற் கண்ணீர்
ஆட்டிச் சொன்மல ரணிந்துதற் போதவின் னமுதை
ஊட்டித் தற்பர ஞானமா மோமவெங் கனலை
மூட்டிச் சம்புவின் பூசைமேன் முயற்சிய ரானார்.

     (இ - ள்.) பாட்டிற்கு இன்புறு குருபரன் - பாட்டிற்கு மகிழும்
குருநாதனுடைய, பாதமேல் கண்ணீர் ஆட்டி - திருவடிமேல் ஆனந்தக்
கண்ணீரால் திரு மஞ்சன மாட்டி, சொல்மலர் அணிந்து - சொல்லாகிய
மலரைச்சூட்டி, தற்போத இன் அமுதை ஊட்டி - சீவபோதமாகிய இனிய
அழுதினை உண்பித்து, தற்பர ஞானமாம் ஓமவெங் கனலைமூட்டி -
பரஞானமாகிய ஓமஞ் செய்தற்குரிய வெப்பமாகிய கனலைமூட்டி, சம்புவின்
பூசை மேல் முயற்சியர் ஆனார் - (இவ்வாறு) சிவ பூசையில்
முயற்சியுடையவர் ஆயினார்.

     கண்ணீர் சொரிதலும், பாடுதலும், தற்போதமிழந்து நிற்றலும், பரஞான
மேலிடலும் ஆகிய இவற்றை முறையே திருமஞ்சனமாட்டல், அருச்சித்தல்,
நிவேதித்தல், ஓமக் கனல் வளர்த்தல் என்பனவாக உருவகித்துச் சிவபூசை
யென்றனர். எனவே, வேறு பூசையின்றேனும் இவை தாமே உண்மைச்
சிவபூசனை யாமென்பது போதரும்; அந்தரியாக பூசை என்பாருமுளர்;

"மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி
உறவாதி தனையுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத வானந்த மெனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னு மமுதமைத் தர்ச்சனை செய்வார்"

எனவும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கே கருதற்பாலது. (51)

ஆசை வெம்பவ வாசனை யற்றுமா ணிக்க
வாச கப்பிரான் றேசிகன் மாணவ ரோதும்
ஓசை யாகம வுபநிடப் பொருளெலாங் கேட்டு
நேச மங்குவைத் திருந்தன ரதுகண்டு நிருத்தன்.