22திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அம்முனை வாளி யொவ்வொன் றடல்புனை * நூற்று நூறு
தெம்முனை வீரர் தம்மைச் செகுத்துயி ருண்ண நோக்கி
இம்முனை வாளி யொன்றுக் கித்துணை வலியா தென்னா
வெம்முனை மறவேற் சென்னி வியந்தனு மான மெய்தா.

     (இ - ள்.) அம்முனைவாளி ஒவ்வொன்று - அந்தக் கூரியகணை
ஒவ்வொன்றும், அடல்புனை தெவ்முனை நூற்று நூறு வீரர்தம்மை -
வெற்றிபுனைந்த பகைவன் போர் முனையிலுள்ள பதினாயிர வீரர்களை,
செகுத்து உயிர் உண்ண - கொன்று உயிரைப் பருக, நோக்கி -
அதனைப்பார்த்து, இம்முனைவாளி ஒன்றுக்கு இத்துணைவலி யாது என்னா
- இந்தக்கூரிய அம்பு ஒன்றுக்கு இவ்வளவு வலி ஏது என்று, வெம்முனை
மறவேல் சென்னி - வெவ்வியகூர்மையுடைய கொலைத்தொழில் பொருந்திய
வேலினையேந்திய சோழன், வியந்து அனுமானம் எய்தா - வியந்து
அனுமானமுற்று.

     நூற்று நூறு - நூறான் உறழ்ந்த நூறு; பதினாயிரம். ஒன்றுக்கு -
ஓரொன்றுக்கு. யாது - எங்ஙனம் பொருந்தியது. அநுமானம் - கருதல்;
ஈண்டு ஐயுறவு என்னும் பொருட்டு. (22)

அன்னகூர் வாளி தன்னைக் கொணர்கென வதனை வாசித்
தின்னது சுந்த ரேச னெனவரைந் திருப்ப தீது
தென்னவற் கால வாயான் றுணைசெய்த செயலென் றஞ்சிப்
பொன்னிநா டுடையான் மீண்டு போகுவான் போகு வானை.

     (இ - ள்.) அன்ன கூர்வாளி தன்னைக்கொணர்க என - அந்த
அம்பினைக் கொண்டு வரக்கடவை என ஒருவனை ஏவி, அதனை வாசித்து
- (அவனால் கொண்டு வரப்பட்ட) அந்த வாளியைப்படித்து, இன்னது
சுந்தரேசன் என வரைந்திருப்பது - இது சுந்தரேசன் என்று எழுதப்பட்டுளது;
ஈது - (ஆதலால்) இது, தென்னவற்கு - பாண்டியனுக்கு, ஆலவாயான்
துணைசெய்த செயல் என்று - ஆலவாய் அண்ணல் துணைபுரிந்த
செய்தியாகும் என்று கருதி, அஞ்சி - பயந்து, பொன்னிநாடு உடையான்
மீண்டு போகுவான் - காவிரி நாடனாகிய சோழன் திரும்பிப்
போவானாயினன்; போகுவானை - அங்ஙனம் போகும் அவனை.

     கொணர்கவென ஏவிக் கொண்டு வந்த அதனை வாசித்து என
விரித்துரைத்துக் கொள்க. கொணர்கென, அகரம் தொகுத்தல். (23)

செருத்துணை யாகி வந்த வுத்தர தேயத் துள்ளார்
துருக்கரொட் டியர்வே றுள்ளார் யாவருஞ் சூழ்ந்து நில்லென்
றுருத்தனர் வைது நீபோர்க் குடைந்தனை போதி யீதுன்
கருத்தெனி னாண்மை யாவர் கண்ணதுன் மான மென்னாம்.

     (இ - ள்.) செருத்துணையாகி வந்த - போர்த்துணையாகி வந்த,
உத்தரதேயத்து உள்ளார் துருக்கர் ஒட்டியர் - வடநாட்டிலுள்ளாராகிய
துருக்கரும் ஒட்டியரும், வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து - இவரொழிந்த


     (பா - ம்.) *நூறு நூறு