வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்221



     குறிப்பு. எத்தல் - விரகுசெய்தல்; ஏமாற்றலுமாம். இருத்தி - இருப்பாய்;
இ விகுதி எதிர்காலங் காட்டிற்று. (53)

கனவில்லருங் காட்சியெனக் கருணை மூர்த்தி
     காட்டிமறைத் தலுமன்பர் கலக்கத் தாழ்ந்து
நனவுகொல்லோ கனவுகொல்லோ வின்று நாதன்
     ஞமலிக்குத் தவிசிட்ட நலம்போ லென்னை
நினைவரிய திருமேனி சாட்டி யாண்டு
     நீத்ததையென் றையுற்று நெஞ்சந் தேறி
இனவடியா ருடன்கூட்டா தேகி னாயோ
     வென்னையுமென் வினையையுமிங் கிருத்தி யெந்தாய்.

     (இ - ள்.) கனவில்வரும் காட்சி என - கனவிற்றோன்றும் தோற்றம்
போல, கருணைமூர்த்தி காட்டி மறைத்தலும் - அருள்வடிவினராகிய இறைவர்
தமதுரு வைக்காட்டி மறைத்தவளவில், அன்பர் - வாதவூரடிகள், கலக்கத்து
ஆழ்ந்து - துன்பக்கடலுள் அழுந்தி, நாதன் இன்று நினைவு அரிய திருமேனி
காட்டி - இறைவன் இன்று நினைத்தற்கரிய தனது திருமேனியைக்
காண்பித்து, ஞமலிக்கு தவிசு இட்ட நலம் போல் - நாய்க்குத் தவிசு அளித்து
நலம்பட ஆண்டமை போல, என்னை ஆண்டு - என்னை ஆண்டருளி,
நீத்தது - நீங்கியருளியது, நனவு கொல்லோ கனவு கொல்லோ என்று ஐயுற்று
- நனவோ அன்றிக்கனவோ என்று ஐயுற்று, நெஞ்சம் தேறி - (பின் நனவே
என) மனந்தெளிந்து, எந்தாய் - எம்தந்தையே, இன அடியாருடன் கூட்டாது
- உன் இனமாகிய அடியாரோடு சேர்க்காமல், என்னையும் என்
வினையையும் இங்கு இருத்தி ஏகினாயோ - அடியேனையும் அடியேன்
வினையையும் இங்கு இருத்திச் சென்றனையோ.

     ஞமலிக்குத் தவிசிட்ட நலம்போல் என்ற கருத்து,

"நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு"

எனவும்,

"பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேயுன் பொன்னருளே"

எனவும் திருவாசகத்துள் வருதல் காண்க. நினைவரிய திருமேனி காட்டி
ஆண்டமையை

"வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்"

எனவும்,