பொறுக்கிலேனுடல் போக்கிடங்காணேன்
போற்றிபோற்றியென் போர்விடைப்பாகா
இறக்கிலேனுனைப் பிரிந்தினிதிருக்க
வென்செய்கேனிது செய்கவென்றருளாய்
சிறைக்கணேபுன னிலவியவயல்சூழ்
திருப்பெருந்துறை மேவியசிவனே" |
எனவும் வரும் திருவாசகத்திருப்பாட்டுக்களிற்
காண்க. செய்கோ -
செய்வேனோ; செய்கு - செய்வேன். (55)
*வறியவனா மொருபிறவிக் குருடன் கையில்
வந்தபெரு விலைமணிபோன் மழலை தேறாச்
+சிறியவனா மொருமதலை கையிற் கொண்ட
செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும்
அறிவரியாய் சிறியேனை யெளிவந் தாண்ட
வருமையறி யேன்றுன்பத் தழுவத் தாழப்
பிறிவறியா வன்பரொடு மகன்றாய் கல்லாப்
பேதையேன் குறையலதெம் பிரானா லென்னே. |
(இ
- ள்.) தேவர்யார்க்கும் அறிவரியாய் - தேவரனைவருக்கும்
அறிதற் கரியவனே, வறியவனாம் ஒரு பிறவிக்குருடன் கையில் -
வறியோனாகிய ஒரு பிறவிக்குருடன் கையில், வந்த பெருவிலைமணி போல்
- தானே வந்து கிடைத்த பெருவிலையினையுடைய மணியைப்போலவும்,
மழலை தேறாச்சிறியவனாம் ஒருமதலை - மழலைச்சொல் தெளியாத
சிறியவனாகிய ஒரு மதலை, கையில் கொண்ட - தனது கையிற்கொண்ட,
செம்பொன்மணி வள்ளம்போல் - சிவந்த பொன்னாலாகிய மணிகள் பதித்த
கிண்ணத்தைப் போலவும், சிறியேனை எளிவந்து ஆண்ட அருமை அறியேன்
- சிறியேனாகிய என்னை எளிவந்து ஆண்டருளிய அருமையை யான்
அறியேன்; துன்பத்து அழுவத்து ஆழ - (அதனால் யான்) துன்பக்கடலுள்
அழுந்த, பிறிவறியா அன்பரொடும் அகன்றாய் - பிறிவினை அறியாத
அடியாரோடும் மறைந்தருளினை; கல்லாப் பேதையேன் குறை அலது -
கல்லாத புல்லறிவினேனது குறையேயன்றி, எம்பிரானால் என் -
எம்பிரானால்யாது குறையுளது.
பிறவிக்குருடனும்,
மதலையும் கிடைத்தற்கரிய பெருவிலை மணியும்
பொன் வள்ளமும் எளிதிற் கிடைத்த வழியும் அவற்றின் அருமையறியாது
கை நெகிழ விடுமாறு போல அடியேனை எளிவந்தாண்ட நினது அருமையை
அறியாது நெகிழ விடலானேன் என்றார். மதலைகையிற் கொண்ட பொன்
வள்ளம்போல் என்னும் கருத்து,
(பா
- ம்.) * வறியனாம். +சிறியனாம்.
|