கலை என்னும் ஏனை
அத்துவாக்களும் கரைய என உபலக்கணத்தாற்
கொள்ளலுமாம்.
"மந்திரம் பதங்கள் வன்னம் புவனங்கள்
தத்து வங்கள்
ஐந்துநற் கலைகள் என்னும் அறுவகை யகற்றி யந்தச்
சிந்தனைக் கரிய மேலைச் சிவத்துட னறிவு சேரப்
பந்தனை யொழிவார் தம்மேற் பரிந்தருட் பார்வை செய்து" |
என்னும் வாதவூரடிகள்
புராணச் செய்யுளுங் காண்க. ஆன்மாவே யான்
என்று எண்ணாத என்னை என்க; எண்ணா என்பதனை ஈறுகெட்ட
எதிர்மறை வினையெச்சமாக்கி, அத்தத்துவங்களை யான் யானென்று
எண்ணாமல் என்னைத் தந்தாய் எனவும் உரைத்தலுமாம். தந்தாய் என்றது
அறிவித்தாய் என்றபடி, என்னை அறிவித்தாய் என்னவே நின்னை
அறிவித்தாய் என்பதும் போதரும்; என்னை ?
"ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை யனைத்தையுங் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்
தன்னையுங் காணாத் தன்மை யோரே." |
என்று பட்டினத்தடிகள்
உணர்ந்து கூறுதலின் என்க. இது முதலிய மூன்று
செய்யுட்களையும் ஐஞ் சீராகப் பிரித்துக் கலிநிலைத்துறை ஆக்கலுமாம். (57)
வானாதி
யைந்துமுதல் வகுத்தவோசை முதலைந்தும்
ஆனாதி யங்குமன மாதிநான்கும் வழியடைப்பத்
தேனாதி யறுசுவையுங் கழியவூறுந் தெள்ளமுதம்
யானார நல்கினையா லெங்குற்றாயோ வெந்தாயே. |
(இ
- ள்.) வான் ஆதி ஐந்தும் - வான் முதலிய பூதங்கள் ஐந்தும்,
முதல் வகுத்த ஓசை முதல் ஐந்தும் - (அவை தோன்றுதற்குக்) காரணமாக
வகுக்கப்பட்ட ஓசை முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், ஆனாது இயங்கும்
- நீங்காது அலையும், மனம் ஆதி நான்கும் - மனமுதலிய அந்தக்
கரணங்கள் நான்குமாகிய இவற்றின், வழி அடைப்ப - வழிதூர, தேன் ஆதி
அறுசுவையும் கழிய ஊறும் தெள் அமுதம் - தேன்முதலிய அறுவகைச்
சுவைப்பொருளினும் சுவைமிக ஊறும் சிவானந்த அமிழ்தினை, யான் ஆர
நல்கினை - யான் உண்ணுமாறு நல்கி யருளினையே; எந்தாய் எங்கு
உற்றாயோ - எந்தையே எங்குப் புக்கனையோ.
ஆன்மதத்துவம்
இருபத்து நான்கில் எஞ்சி நின்ற ஞானேந்திரியம்
ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் இனம்பற்றிக் கொள்க. வழியடைத்தலாவது
பிறவி யொழிதல்; கரணங்களும் பொறிகளும் விடய நுகர்ச்சியிற்செல்லும்
வழிதூர என்றுமாம்;
|