226திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



"மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்
தமுதே ஊறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந்
                                             தருளாய்
தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே"

என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற்பாலது. தேன் ஆதி அறுசுவை -
தேன், பால், கன்னல், கனி, சீனி, கற்கண்டு என்ப. ஐந்து, நான்கு, சுவை
என்பன ஆகு பெயர்கள். கழிய, கழி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த
வினையெச்சம். ஆல், அசை. (58)

மாசாய் மறைக்குமல வலியும்நானும் வேறின்றி
ஆசா *விகாரமல மாயினேனைப் பொருட்படுத்திப்
பேசாத +வின்புருவி னின்னோடென்னைப் பின்வைத்த
ஈசா வெனையிங்கிட் டெங்குற்றாயோ வெந்தாயே.

     (இ - ள்.) மாசு ஆய் மறைக்கும் மலவலியும் நானும் வேறு இன்றி -
இருளாகி மறைக்கும் ஆணவமலவலியும் யானும் அத்துவிதமாய்,
ஆசாவிகாரமலம் ஆயினேனை - பல திறப்பட்ட ஆசையாகிய மலமான
என்னையும், பொருள்படுத்தி - ஒரு பொருளாக்கி, பேசாத இன்பு உருவின்
நின்னோடு - உரைக்கப்படாத இன்ப வடிவினையுடைய நின்னோடு,
என்னைப் பின் வைத்த ஈசா - என்னைப் பின்னே வைத்த இறைவனே,
எந்தாய் - எமது தந்தையே, எனை இங்கு இட்டு எங்கு உற்றாயோ -
அடியேனை இங்கு வைத்து எங்கு உற்றனையோ.

     மறைக்கும் - அறிவு இச்சை செயல்களை மறைக்கின்ற.
கேவலாவத்தையில் ஆணவமலத்தோடும், சகலாவத்தையில் தனு கரண
புவன போக வடிவாகிய மாயா மலத்தோடும் ஒன்றுபட்டுக் கிடந்த என்னை
நின்மலாவத்தையிற் புகுத்தி நின்னைச் சாரவைத்த ஈசனே என்றாரென்க.
எதுசை நோக்கி ஆசா என்பது திரியாது நின்றது. பேசப்படாத என்றமையால்
நினைக்கப்படாத என்பதும் கொள்க;

"உரைமாண்ட வுள்ளொளி யுத்தமன்வந் துளம்புகலும்"

எனவும்,

"உள்ளப்படாத திருவுருவை யுள்ளுதலும்"

எனவும் திருவாசகத்திலவருதல் காண்க. (59)

              [கலிநிலைத்துறை]
என்று வாய்திறந் தரற்றினா ரிரங்கினார் புனிற்றுக்
கன்று நீங்கிய வானெனக் கரைந்தநெஞ் சினராய்ச்
சென்று கோபுர வாயிலின் புறம்புபோய்த் திரண்டு
நின்ற காவலன் றமர்களை நேர்ந்தனர் நோக்கா.


     (பா - ம்.) * விகாரமயம். +அன்புருவின்.