ஏனையோருமாகிய அனைவருங்
கூடி, நில் என்று உருத்தனர் வைது -
நிற்பாயாக என்று கூறிச்சினந்து வைது, நீ போர்க்கு உடைந்தனை போதி -
நீ போருக்குத் தோற்றுப் போகின்றாய்; ஈது உன் கருத்து எனின் - இது
உனது கருத்தானால், ஆண்மை யாவர் கண்ணது - ஆண் தன்மை
யாரிடத்தது; உன்மானம் என்னாம் - உனது பெருமை என்னாகும்.
உருத்தனர்,
உடைந்தனை யென்பன முற்றெச்சங்கள். போதி :
எழுத்துப் பேறு. (24)
செல்லலை வருதி யென்னாச் செயிர்த்தெழுந் திடியி னார்த்துக்
கல்லெழு வனைய திண்டோட் கௌரியன் படைமேற் சென்று
வில்லிற வலித்து வாங்கி வேறுவே றாகி நின்று
சொல்லினுங் கடிய வாளி தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார். |
(இ
- ள்.) செல்லலை வருதி என்னா - (ஆதலால்) நீ செல்லற்க
வருவாயாக வென்று கூறி, செயிர்த்து எழுந்து இடியின் ஆர்த்து - சினந்து
எழுந்து இடிபோல ஆரவாரித்து, கல் எழு அனைய திண்தோள் கௌரியன்
படைமேல் சென்று - கற்றூணை யொத்த திண்ணிய தோளையுடைய
பாண்டியன் சேனை மேற்சென்று, வில் இறவலித்து வாங்கி - வில் முறியுமாறு
இழுத்துவளைத்து, வேறு வேறு ஆகி நின்று - தனித்தனி ஒவ்வோரிடத்தில்
நின்று, சொல்லினும் கடியவாளி - (முனிவர் சாப) மொழியினும் விரைந்து
செல்லும் வாளிகளை, தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார் - தொடுத்து
விடுத்துத் தூர்த்தனர்.
"சொல்லொக்குங்
கடியவேகச் சுடுசரம்" என்னும் கம்பராமாயணச்
செய்யுட்டொடர் ஈண்டுக் கருதற்பாலது. தொடுத்தனர், விடுத்தார் என்பன
முற்றெச்சங்கள். (25)
வடுத்தவா
மருமச் செம்புண் மறமக னாகி நின்ற
கடுத்தவா மிடற்று முக்கட் கண்ணுதற் சாமி தான்முன்
எடுத்தவா டகவி லன்ன * விருஞ்சிலை வாளி யொன்று
தொடுத்தவா டவர் தாம் விட்ட சுடுசரந் தொலைத்துப்
பின்னும். |
(இ
- ள்.) வடு தவா மருமம் செம்புண் மறமகன் ஆகி நின்ற -
வடுநீங்காத மார்பின்கண் செம்புண்ணையுடைய வேடத்திருவுருவங் கொண்டு
நின்ற, கடுதவா மிடற்று முக்கண் கண்ணுதல் சாமி - நஞ்சு நீங்காத
திருமிடற்றையும் மூன்றுகண்களையுமுடைய சோமசுந்தரக்கடவுள், தான் முன்
எடுத்த ஆடகவில் அன்ன இருஞ்சிலை - தான் திரிபுரமெரித்தஞான்று
எடுத்த மேருவில்லைப் போலும் பெரியவில்லில், வாளி ஒன்று தொடுத்து -
ஓர் அம்பினைத் தொடுத்து விடுத்து, அ ஆடவர் விட்டசுடுசரம் தொலைத்து
- அந்த ஆடவர் விட்ட கொடியகணைகளை அழித்து, பின்னும் - மீண்டும்.
(பா
- ம்.) * வில்லென்ன.
|