"வையக மன்ன ராகி வாழ்வதின் மனைக
டோறும்
எய்திய வுதரத் தீயா லிரப்பது பெருமை யென்றும்
மெய்தகத் தம்மை யாண்ட வேந்தரைப் பிழைத்து வேறு
செய்வது பலிக்கு மென்று தேர்ந்தநூற் றுணிவுங் கண்டேம்." |
"மன்னரை யடைந்து வாழ்தல் வஞ்சநஞ்
சுமிழு நாகந்
தன்னுடன் மருவி வாழுந் தன்மையென் றுணர்வீராயில்
துன்னுமிவ் வோலை காணும் பொழுதுநந் தூதர் தம்மோ
டிந்நகர் வருக மாற னெழுத்தென வுரைத்து நின்றான்" |
என விரித்துரைக்கப்
பெற்றுளது. (66)
சிந்தை யாகிய
செறுவினுட் சிவமுத லோங்கப்
பந்த பாசம்வே ரறக்களைந் தருட்புனல் பாய்ச்சி
அந்த மாதியின் றாகிய வானந்த போகந்
தந்த தேசிக வுழவன்றன் கோயிலைச் சார்ந்தார். |
(இ
- ள்.) சிந்தையாகிய செறுவினுள் - உள்ளமாகிய விளை நிலத்துள்,
சிவ முதல் ஓங்க - அன்பாகிய முளை வளர, பந்தபாசம் வேர்அறக்
களைந்து - பந்தமாகிய பாசமென்னும் களையினை வேரறக் களைந்து,
அருள் புனல் பாய்ச்சி - அருளாகிய நீரினைக் கால்யாத்து, அந்தம் ஆதி
இன்று ஆகிய - முதலு முடிவும் இல்லையாகிய, ஆனந்த போகம் தந்த
தேசிக உழவன்தன் - சிவானந்தமாகிய விளைவினைப் புசிக்குமாறு தந்தருளிய
குரவனாகிய உழவனது, கோயிலைச் சார்ந்தார் - திருக் கோயிலைச்
சார்ந்தனர்.
சிவம்
- அன்பு; பத்தி. பிறவாறும் உருவகஞ் செய்ப;
"அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட வழவ ராரத் தந்த
அண்டத் தரும்பிபறன் மேகன் வாழ்க" |
என்னும் திருவாசகமும்,
"மெய்ம்மையா முழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே" |
என்னும் திருநாவுக்கரசர்
தேவாரமும்,
"அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனு மெருவை விரித்தாங் கையமில்
பத்தித் தளிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று" |
|