என்னும் பட்டினத்தடிகள்
திருவாக்கும் நோக்குக.
இது
மிகை குறையில்லாத ஒற்றுமை யுருவகவணி. (67)
அறுசீரடியாசிரிய
விருத்தம் |
என்னா யகனே
பொன்னாட ரேறே யேறு கொடியுயர்த்த
மன்னா தென்னா பெருந்துறையெம் மணியே வழுதி பொருளெல்லாம்
நின்னா லயத்து நின்னடியா ரிடத்துஞ் செலுத்து நெறியளித்தாய்
பின்னா னவனுக் கென்கொண்டு பரிமாச் செலுத்தப் பெறுமாறே. |
(இ
- ள்.) என் நாயகனே - எனது தலைவனே, பொன்னாடர் ஏறே -
தேவர்கள் சிங்கவேறே, ஏறு கொடி உயர்த்த மன்னா - இடபத்தைக்
கொடியின் கண் உயர்த்தியருளிய மன்னா, தென்னா - சுந்தரபாண்டியனே,
பெருந்துறை எம் மணியே - திருப்பெருந் துறையில் எழுந்தருளிய எமது
மாணிக்கமே, வழுதி பொருள் எல்லாம் - பாண்டியன் பொருளனைத்தையும்,
நின் ஆலயத்தும் நின் அடியாரிடத்தும் - நின் திருக்கோயிலின்
திருப்பணியிலும் நினது அடியார் திறத்திலும், செலுத்தும் நெறி அளித்தாய் -
செலவிடும் நெறியினை எனக்குத் தந்தருளினை; பின் நான் - இனி யான்,
அவனுக்கு என்கொண்டு பரிமாச் செலுத்தப் பெறுமாறு - அப்பாண்டியனுக்கு
எதுகொண்டு குதிரை செலுத்தப் பெறும் வகை.
பொன்னாடரேறே
என்ற கருத்து நம்பியாரூரர் அருளிச் செய்த
திருவாலங் காட்டுத் தேவாரப் பதிகத்தில்,
என வருதல் காண்க.
நீயே வழுதி பொருளெல்லாம் செலவிடச்
செய்தாயாகலின் பரிமாச் செலுத்தும் வகையும் நீயே காட்டுதல் வேண்டு
மென்பார் இங்ஙனம் கூறினாரென்க. (68)
என்னா விறைஞ்சி
யெழுந்தேத்தி யிரந்தா ரெதிரே பெருந்துறையின்
மின்னார் சடைமேற் பிறைமுடித்தோன் விசும்பி னிறைந்த
திருவாக்கான்
மன்னா னவற்குப் பரியெல்லாம் வருமென் றோலை விடுதியெனச்
சொன்னா னதுகேட் டகத்துவகை துளும்பி வரைந்து சுருள்விடுத்தார். |
(இ
- ள்.) என்னா இறைஞ்சி எழுந்து - என்று கூறிக் கீழே வீழ்ந்து
வணங்கி எழுந்து நின்று, ஏத்தி இரந்தார் எதிரே - பலபடத் துதித்துக் குறை
யிரந்த மாணிக்கவாசக ரெதிரே, பெருந்துறையின் மின் ஆர் சடைமேல் பிறை
முடித்தோன் - பெருந்துறையில் எழுந்தருளிய மின்போன்ற சடையின்கண்
பிறையினை முடித்தருளிய இறைவன், விசும்பில் நிறைந்த திருவாக்கால் -
வாயின்கண் நிறைந்த திருவாக்கினால், மன்னானவற்கு - பாண்டியனுக்கு, பரி
எல்லாம் வரும் என்று ஓலை விடுதி எனச் சொன்னான் - குதிரைகளெல்லாம்
வருமென்று எழுதி ஓலை விடுப்பாயாக என்று கூறியருளினான்: அதுகேட்டு-
|