அதனைக் கேட்டு, அகத்து
உவகை துளும்பி வரைந்து சுருள் விடுதார் -
மனத்தின்கண் மகிழ்ச்சி மிக்கு ஓலை எழுதிப் போக்கினர்.
விசும்பினிறைந்த,
திருவாக்கு - அசரீரி. மன்னானவற்கு - மன்னற்கு;
ஆனவன், முதல் வேற்றுமைச் சொல். மன்னற்கு ஓலை விடுதி எனக் கூட்டுக.
ஓலையைச் சுருளாகச் செய்து அனுப்புதல் வழக்காகலின் சுருள் விடுத்தார்
என்றார்; இது முடங்கல் எனவும் கூறப்படும். (69)
அந்த வோலைப் பாசுரமு மறையக் கேட்டு நின்றாங்கோர்
சிந்தை யானா மகிழ்சிறப்ப விருந்தான் புரவித் தேரோடும்
வந்த வாதிச் செங்கதிரோன் மறைந்தா னவனால் வையமெலாம்
வெந்த வேடை தணிப்பான்போன் முளைத்தா *னாதி வெண்கதிரோன். |
(இ
- ள்.) அந்த ஓலைப் பாசுரமும் அறைய - அந்த ஓலையின்
வாசகத்தையும் ஒருவன் படிக்க, நின்று கேட்டு - கருத்துடன் நின்று கேட்டு,
ஓர் ஆங்கு - அதனை அறிந்த பொழுதே, சிந்தை ஆனா மகிழ்சிறப்ப
இருந்தான் - மனத்தின் கண் நீங்காத மகிழ்ச்சி மிக இருந்தனன்;
புரவித்தேரோடும் ஆதி வந்த செங்கதிரோன் மறைந்தான் - குதிரைகள்
பூட்டிய தேருடன் வந்த ஆதியாகிய சூரியன் மறைந்தனன்; அவனால்
வையம் எலாம் வெந்த வேடை - அச்சூரியனால் நிலவுலகனைத்து வெந்த
வெப்பத்தினை, தணிப்பான் போல் - ஆற்றுபவனைப்போல, வெண்கதிரோன்
ஆதிமுளைத்தான் - சந்திரன் கீழ்த்திசையிற் றோன்றினன்.
ஆங்கு,
ஓர் என்பன அசையுமாம். ஆதி - சூரியன்; ஆதியாகிய
செங்கதிரோன் என இருபெயரொட்டு; புரவித் தேரோடும் நேரே வந்த
செங்கதிரோன் என்றுமாம்; ஆதி - நேரோடல்; இடப வீதியாகிய முதல்
வீதியிற் செல்லும் ஆதித்தன் என்று கூறலும் பொருந்தும். ஆரி முளைத்தான்
- முதற்றிசையாகிய கீழ்த்திசையில் உதித்தான். (70)
அன்று துயிலும் வாதவூ ரடிகள் கனவிற் சுடர்வெள்ளி
மன்று கிழவர் குருந்தடியில் வடிவங் காட்டி யெழுந்தருளி
வென்றி வேந்தன் மனங்கவரும் விசயப் பரிகொண் டணைகின்றேம்
இன்று நீமுன் னேகுதியென் றருளிச் செய்ய வெழுந்திருந்தார். |
(இ
- ள்.) அன்று துயிலும் வாதவூர் அடிகள் கனவில் - அன்று இரவு
துயில்கின்ற வாதவூரடிகள் கனவின் கண், வெள்ளி மன்று கிழவர் -
வெள்ளியம்பலத்திற்கு உரிய சோமசுந்தரக்கடவுள், குருந்து அடியில் வடிவம்
காட்டி எழுந்தருளி - குருந்த மரத்தடியில் ஆட்கொண்ட ஆசிரியக்கோலங்
காட்டி எழுந்தருளி, வென்றி வேந்தன் மனம் கவரும் - வெற்றியை யுடைய
பாண்டியனது மனத்தைக் கொள்ளை கொள்ளும், விசயப்பரிகொண்டு
(பா
- ம்.) * ஆழிவெண்கதிரோன்.
|