அணைகின்றேம் - வெற்றியைத்தரத்தக்க
குதிரைகளை வாங்கிக்கொண்டு
வருவேம்; இன்று நீமுன் ஏகுதி என்று அருளிச்செய்ய - இன்று நீ முன்னே
செல்வாயென்று அருள்புரிய, எழுந்திருந்தார் - வாதவூரடிகள்
விழித்தெழுந்தார்.
குருந்தடியில்
வடிவம் - குருந்தடியில் எழுந்தருளிய வடிவம். வடிவங்
காட்டி - வடிவத்துடன்கனவில் எழுந்தருளி அருளிச்செய்ய என்க. (71)
கனவி னிடத்துந்
தேவர்க்குங் காண்டற் கரிய கருணையுரு
நனவி னிடத்துங் கனவிடத்து மெளிதே யன்றோ நமக்கென்ன
நினைவி னிடைக்கொண் டிருக்கின்றார் நிருத்தா னந்தச் சுடருள்ளத்
திருவி ருளைத்தின் றெழுவதென வெழுந்தா னிரவி யிரவொதுங்க. |
(இ
- ள்.) கனவினிடத்தும் தேவர்க்கும் காண்டற்கு அரிய கருணை
உரு - கனவின் கண்ணும் தேவருக்கும் காணுதற்கரிய அருள் வடிவம்,
நனவினிடத்தும் கனவிடத்தும் எளிதே அன்றோ நமக்கு என்ன - நனவிலும்
கனவிலும் நமக்கு எளிதல்லவா என்று, நினைவினிடைக் கொண்டு
இருக்கின்றார் - (வாதவூரர்) கருதிக் கொண்டிரா நின்றார்; உள்ளத்து
இனஇருளை - அவ்வடிகளது உள்ளத்தின் கட் செறிந்த ஆணவமலமாகிய
இருளை, நிருத்தானந்தச் சுடர்தின்று எழுவது என - ஆனந்தக்கூத்தினை
யுடைய இறைவனென்னும் ஞான சூரியன் தின்று எழுந்தாற் போல, இரவி
இரவு ஒதுங்க எழுந்தான் - சூரியன் இருள் ஒதுங்க எழுந்தனன்.
கனவினிடத்தும்,
தேவர்க்கும் என்னும் உம்மைகள் முறையே இழிவு
சிறப்பும், உயர்வு சிறப்பும் ஆம். இறைவன் கனவிலும்
தேவர்க்கரியனாதலையும் நனவிலும் தமக்கு எளியனாதலையும்,
"கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும்
நாயேற் கருளினை போற்றி" |
எனவும்,
"கனவேயுந் தேவர்கள் காண்பரிய
கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி
நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்க ணீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ" |
எனவும் அடிகள் திருவாசகத்தில்
அருளிச் செய்திருத்தல் காண்க. (72)
எழுந்தா ருடைய
பெருந்துறையா ரிருதாள் பணிந்தா ரினிப்பிறப்பில்
அழுந்தார் வழிக்கொண் டாரடைந்தா ரகன்றார் நெறிக ளவிர்திங்கட்
கொழுந்தார் சடையார் விடையார்தென் கூட லணைந்தார் பாடளிவண்
டுழுந்தார் வேந்தன் பொற்கோயி லுற்றார் காணப் பெற்றாரால். |
|