(இ
- ள்.) இனிப் பிறப்பில் அழுந்தார் - இனிப் பிறப்பினுள்
அழுந்தாதவராகிய வாதவூரடிகள் அப்பொழுது எழுந்து, உடைய பெருந்துறை
இருதாள் பணிந்தார் - தம்மை ஆளாகவுடைய பெருந்துறை நாதரின் இரண்டு
திருவடிகளையும் பணிந்து, வழிக்கொண்டார் அடைந்தார் நெறிகள் அகன்றார்
- வழிக்கொண்டு சென்று சேய நெறிகளைக் கடந்து, அவிர்திங்கள் கொழுந்து
ஆர் சடையார் விடையார் - விளங்காநின்ற இளஞ்சந்திரனை அணிந்த
சடையினை யுடையாரும் இடப வூர்தியை யுடையாருமாகிய சோமசுந்தரக்
கடவுளின், தென்கூடல் அணைந்தார் - மதுரையைச் சார்ந்து, பாடுஅளி
வண்டு உழும்தார் வேந்தன் பொற் கோயில் உற்றார் - இசைபாடும்
வண்டுகள் கிண்டா நின்ற வேப்பமலர் மாலையை யணிந்த பாண்டியனது
பொன்மயமான அரண்மனையை அடைந்து, காணப் பெற்றார் - அரசனைக்
காணப் பெற்றனர்.
அழுந்தார்,
வினையாலணையும் பெயர். எழுந்தார், பணிந்தார், வழிக்
கொண்டார், அடைந்தார், அகன்றார், அணைந்தார், உற்றார் என்பன
முற்றெச்சங்கள். அளி வண்டு - அளியாகிய வண்டு. ஆல், அசை. (73)
மன்னர் பெருமா னெதிர்வந்த மறையோர் பெருமான் வழிபாடு
முன்னர் முறையாற் செய்தொழுகி முன்னே நிற்ப முகநோக்கித்
தென்னர் பெருமா னெவ்வளவு செம்பொன் கொடுபோ யெவ்வளவு
நன்ன ரிவுளி கொண்டதெனக் கேட்டான் கேட்ட நான்மறையோர். |
(இ
- ள்.) மன்னர் பெருமான் எதிர்வந்த மறையோர் பெருமான் -
மன்னர் மன்னனாகிய பாண்டியனுக்கு முன்னேவந்த வேதியர் பெருமானாகிய
அடிகள், முன்னர் முறையால் வழிபாடு செய்தொழுகி - முன் செய்யும்
முறைப்படியே வழிபாடு செய்தொழுகி, முன்னே நிற்ப - எதிரில் நிற்க,
தென்னர் பெருமான் முகம் நோக்கி - அப்பாண்டியர் தலைவன் அவர்
முகத்தைப் பார்த்து, எவ்வளவு செம்பொன் கொடு போய் - எவ்வளவு
செம்பொன்னை எடுத்துச் சென்று, எவ்வளவு நன்னர் இவுளி கொண்டது
எனக் கேட்டான் - எவ்வளவு நல்ல குதிரைகள் வாங்கிய தென்று
வினவினன்; கேட்ட நான் மறையோர் - அதனைக்கேட்ட அடிகள்.
முன்னர்
முறை - புரவி வாங்கப் புறப்படுமுன் அமைச்சராகிய தாம்
அரசர்க்குச் செய்து போந்த முறை. தென்னர் பெருமான், நான் மறையோர்
என்பவற்றைச் சுட்டாகக் கொள்க. நன்னர், பண்புப் பெயர். கொண்டது,
தொழிற்பெயர். கேட்டல் இரண்டனுள் முன்னது வினாவுதல், பின்னது
செவியுறல். (74)
பொன்னு
மளவோ விலைகொண்ட புரவித் தொகையு மனைத்தவைதாம்
பின்னர் வரக்கண் டருளுதியெம் பெருமா னிதனாற் றுரங்கபதி
என்னு நாமம் பெறுதிமதி யென்றா ரென்ற மந்திரர்க்குத்
தென்னன் சிறந்த வரிசைவளஞ் செய்து விடுப்பச் செல்கின்றார். |
|