(இ
- ள்.) பொன்னும் அளவோ - எடுத்துச் சென்ற பொன்னும் ஓர்
அளவினை யுடையதோ (அன்று), விலைகொண்ட புரவித் தொகையும்
அனைத்து - வாங்கி குதிரைத் தொகையும் அத்தன்மைத்தே; அவை தாம்
பின்னர் வரக்கண்டு அருளுதி - அக்குதிரைகள் பின்பு வரக் கண்டருள்வாய்;
எம்பெருமான் - எமது தலைவ, இதனால் துரங்கபதி என்னும் நாமம்
பெறுதிமதி - இக்காரணத்தினால் துரங்கபதி என்னும் பெயரினைப்
பெறுவாயாக; என்றார் - என்று கூறினார்; என்ற மந்திரர்க்கு - என்று கூறிய
அமைச்சர்க்கு, தென்னன் - அரிமருத்தன பாண்டியன், வளம் சிறந்த வரிசை
செய்து விடுப்ப - வளமிக்க பல வரிசைகள் அளித்து அனுப்ப, செல்கின்றார்
- செல்லும் அவ்வடிகள்.
பொன்னும்
எங்ஙனம் அளவின்றோ அங்ஙனமே புரவிக்கும் அளவின்று
என்றார். இதனால் - இங்ஙனம் அளவிறந்த குதிரைகளை எய்துதலால். மதி
யென்னும் முன்னிலை யசைச்சொல் முன்னிலை முற்றைச் சார்ந்து வந்தது; மதி
- இதனைக் கருதுவாயாக என்றலுமாம். தாம், அசை. (75)
பொன்னங் கமலத் தடம்படிந்து புழைக்கை மதமா முகக் கடவுள்
தன்னங் கமலச் சரணிறைஞ்சித் தனியே முளைத்த சிவக்கொழுந்தை
மின்னங் கயற்கட் கொடிமருங்கில் விளைந்த தேனை முகந்துண்டு
முன்னங் கருத்து மொழியுடம்பு மூன்று மன்பாய்த் தோன்றினார். |
(இ
- ள்.) பொன் கமலத்தடம் படிந்து - பொற்றாமரைத் தடத்தில்
நீராடி, புழைக்கை மதமா முகக் கடவுள் தன் - துளை பொருந்திய
துதிக்கையையும் மதப் பெருக்கினையு முடைய யானைமுகத்தினை யுடைய
சித்தி விநாயகக் கடவுளின், அம் கமலச் சரண் இறைஞ்சி - அழகிய தாமரை
மலர் போன்ற திருவடிகளை வணங்கி, தனியே முளைத்த சிவக் கொழுந்தை
- ஒன்றாய் முளைத்த சிவக் கொழுந்தை, மின் அம் கயற்கண் கொடி
மருங்கில் விளைந்த தேனை - மின் போன்ற அழகிய அங்கயற்கண்ணம்மை
என்னும் கொடியின் பக்கத்தில் விளைந்த தேனை, முகந்து உண்டு -
கண்ணாகிய வாயினால் மொண்டு பருகி, முன்னம் கருத்து மொழி உடம்பு
மூன்றும் - திரு முன்னர் உள்ளமும் உரையும் உடலுமாகிய மூன்று
கரணங்களும், அன்பாய்த் தோன்றினார் - அன்பு வடிவாய்க் காணப்பட்டார்.
பொன்னம்,
அம்அசை. உமையைக் கொடியாகவும் சிவத்தைத்
தேனாகவும் உருவகித்தார். கண்ணாகிய வாயால் என வருவித் துரைக்க.
அன்பு மயமாகிய சிவத்தேனை உண்டமையால் தாமும் அன்புமயமாயினா
ரென்க. முன்னங் கருத்து என்பதற்கு முன்னுதலை யுடைய அழகிய கருத்து
என்றுமாம். முன்னுதல் - நினைத்தல். (76)
மன்னே யென்னை யாட்கொண்ட மணியே வெள்ளி மன்றாடும்
அன்னே யடியேன் வேண்டியவா றரச னீந்த நிதியெல்லாம்
முன்னே கொண்டென் பணிகொண்டாய் முனியா தரச னனிமகிழ
என்னே புரவி வரும்வண்ண மென்று வேண்டி நின்றிடலும். |
|