236திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) மன்னே - என திறைவனே, என்னை ஆட்கொண்ட
மணியே - என்னை அடிமையாகக் கொண்டருளிய மாணிக்கமே, வெள்ளி
மன்று ஆடும் அன்னே - வெள்ளியம்பலத்தில் திருக் கூத்தாடி யருளும்
அன்னையே, அடியேன் வேண்யவாறு - அடியேன் வேண்டிக் கொண்ட
வண்ணமே, அரசன் ஈந்த நிதி எல்லாம் - அரசன் அளித்த பொருள்
முழுதையும், முன்னே கொண்டு என் பணி கொண்டாய் - முதலில் ஏற்றுக்
கொண்டு பின் என் பணியையும் கொண்டருளினை; அரசன் முனியாது
நனிமகிழ - மன்னன் சினங் கொள்ளாது மிகவும் மகிழ்ச்சி அடையுமாறு,
புரவிவரும் வண்ணம் என்னே என்று வேண்டி இரந்திடலும் - குதிரைகள்
வருமாறு எங்ஙன மென்று வேண்டி நின்ற வளவில்.

     எங்ஙனம் புரவி வருமென நான் அறிகிலேன் நீயே அருளிட
வேண்டும் எனக் குறையிரத்தலும் என்க. (77)

மெய்யன் புடையா யஞ்சலைநீ வேட்ட வண்ணம் விண்ணிரவி
வையம் பரிக்கும் பரியனைய வயமாக் கொண்டு வருதுமென
ஐயன்றிருவாக் ககல்விசும்பா றெழுந்த தாக வதுகேட்டுப்
பொய்யன் பகன்றார் சிவன்கருணை போற்றி மனையிற் போயினார்.

     (இ - ள்.) மெய் அன்பு உடையாய் - உண்மை யன்புடையாய்,
அஞ்சலை - அஞ்சுதலொழிவாய்; நீ வேட்ட வண்ணம் - நீ வேண்டியவாறே,
விண் இரவி வையம் பரிக்கும் பரி அனைய - வானின் கண் உள்ள
சூரியனது தேரை இழுக்கும் குதிரையை ஒத்த, வயமாக் கொண்டு வருதும்
என - வெற்றியை யுடைய குதிரைகளைக் கொண்டு வருவேம் என்று, ஐயன்
திருவாக்கு - இறைவன் திருவாக்கு, அகல் விசும்பி ஆறு எழுந்ததாக -
அகன்ற வானின் வழியே (அசரீரியாக) எழா நிற்க, அது கேட்டு - அதனைக்
கேட்டு, பொய் அன்பு அகன்றார் - பொய்யன்பு நீங்கிய வாதவூரடிகள்,
சிவன் கருணை போற்றி மனையில் போயினார் - சிவபிரான் கருணையைத்
துதித்துத் தமது இல்லிற்குச் சென்றனர்.

     அஞ்சலை, அல் எதிர்மறையிடை நிலை; ஐ முன்னிலை விகுதி. வையம்
- தேர். எழுந்தது எழ அதனைக் கேட்டு என விரித்துக் கொள்க. (78) -

                    வேறு
கடிமனை யடைந்த வெல்லை வாதவூர்க் காவ லோரை
மடிமையில் சுற்றத் தோருங் கேளிரு மாண்ட காதல்
அடிமையுள் ளாரு மேதி லாளரும் பிறரு மீண்டி
இடிமழை வாய்விட் டென்னப் புந்திக ளினைய சொல்வார்.

     (இ - ள்.) கடிமனை அடைந்த எல்லை - விளக்கமமைந்த தமது
இல்லினை அடைந்த பொழுது, வாதவூர்க்காவலோரை -
அவ்வாதவூரமைச்சரை, மடிமை இல் சுற்றத்தோரும் கேளிரும் - சோர்
வில்லாத சிளைஞரும் நட்பினரும், மாண்டகாதல் அடிமையுள்ளாரும் -