சிறந்த அன்பினையுடைய
ஏவலாளரும், ஏதிலாளரும் பிறரும் ஈண்டி -
அயலாரும் மற்றையோரும் நெருங்கி, இடிமழைவாய் விட்டென்ன - இடிக்கும்
மேகம் வாய்திறந்தாற் போல, இனைய புந்திகள் சொல்வார் - இவ்வாறான
புத்திகளைச் சொல்வாராயினர். பெரியோர்களை அவர்கள் அவதரித்த
ஊர்க்குத் தலைவராகக் கூறுதல் மரபாகலின் வாதவூர்க் காவலோரை
என்றார்.
மடிமை
- மடியின்றன்மை. பலருந் திரண்டு கழறுதலால் இடி மழை
வாய்விட்டென்ன என்றார்; வாய்விடுதல் - முழங்குதல்; விட்டாலென்ன
என்பது விட்டென்ன எனத்தொக்கது. (79)
மந்திரக் கிழமை பூண்டு மன்னவர் கருமஞ் செய்வ
தந்தணர்க் கறனே யல்ல வமைச்சிய லறத்து நின்றால்
வெந்திற லரசர்க் கேற்ற செய்வதே வேண்டு மென்னத்
தந்திர மனுநூல் வல்லோர் சாற்றுவா ரன்றோ வையா. |
(இ
- ள்.) மந்திரக்கிழமை பூண்டு - அமைச்சியலுரிமை பூண்டு,
மன்னவர் கருமம் செய்வது - அரசரது வினைசெய்தல், அந்தணர்க்கு அறனே
அல்ல - மறையவருக்குரிய அறமே அன்று; அமைச்சியல் அறத்து நின்றால் -
அமைச்சியலுக்குரிய அறநெறியில் நின்றால், வெந்திறல் அரசர்க்கு ஏற்ற
செய்வதே வேண்டும் என்ன - மிக்க வலியினையுடைய அம்மன்னவர்க்குப்
பொருந்திய வினைகளையே செய்ய வேண்டுமென்று, ஐயா - ஐயனே,
தந்திரம் மறுநூல் வல்லோர் - தந்திரமாகிய மனுநூல் வல்லவர், சாற்றுவார்
அன்றோ - கூறுவார் அல்லவா.
மன்னவர்
கருமம் - அரசரேவிய வினை, அரச காரியம்; அரசர்க்குரிய
தொழல்களுமாம். நூலும் கரகமும் முக்கோலும் மணையும் உடையராய்ப்
பிச்சை கொண்டுண்டேனும் தமது பொருளுண்டேனும் ஓதல், ஓதுவித்தல்,
வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறு தொழில்
புரிந்தொழுகல் அந்தணர்க்குரிய அறமாகலின் மன்னவர்
கருமஞ்செய்வதந்தணர்க்கறனேயல்ல என்றார். செய்வது, தொழற் பெயர்.
அரச காரியஞ் செய்வது அந்தணர்க்குரித்தன்று, அங்ஙனம் உரித்தல்லாத
அதனையும் அவர் ஒரே வழி மேற்கொள்ளின், பின்பு அரசர்க்குரிய
வினைகளாகிய நாடுகாத்தலும் பகை யொறுத்தலும் முதலியவற்றிற்கு
ஏற்றவைகளையே புரிதலும், அவனது ஒளியோடு பொருந்த ஒழுகுதலும்
செய்தல் வேண்டுமென்க. தந்திரம் வல்லோரும் மனுநூல் வல்லோரும்
என்றுமாம்; தந்திரம் - ஆகமம். (80)
அரைசிய லமைச்சு நீதி யாய்ந்தநுங் கட்கு நாங்கள்
உரைசெய்வ தெவனீர் செய்வ தொன்றுநன் றாவ தில்லை
விரைசெறி தாராற் கின்று வெம்பரி வருவ தாக
வரையறை செய்தீர் நாளை யென்சொல வல்லீ ரையா. |
|