(இ
- ள்.) அரைசியல் அமைச்சுநீதி ஆய்ந்த நுங்கட்கு -
அரசியலையும் அமைச்சர் நீதியையும் ஆராய்ந்தறிந்த நுமக்கு, நாங்கள்
உரை செய்வது எவன் - நாங்கள் சொல்லக் கிடப்பது யாது, நீர் செய்வது
ஒன்றும் நன்றாவது இல்லை - நீர் செய்யுங்காரியம் சிறிதும் அழகிதன்று;
விரை செறிதாராற்கு - மணமிக்க வேப்ப மலர் மாலையை யணிந்த
பாண்டியனுக்கு, வெம்பரி இன்று வருவதாக வரையறை செய்தீர் -
விரும்பத்தக்க குதிரைகள் இன்று வருமென நாள் வரை யறுத்தீர்; ஐயா -
ஐயனே, நாளை என் சொலவல்லீர் - (குதிரை வராவிடில்) நாளை என்ன
சொல்ல வல்லீரோ.
அரசியல்
- அரசனது தன்மை என்றுமாம்; ஆவது, பிழை செய்தாரைக்
கண்ணோடாது ஒறுத்தல் முதலிய அவனது பெற்றி. வெம்பரி -
கடுஞ்செலவினை யுடைய பரி என்றுமாம். வருவதாக - வருமென. பரி இன்று
வருவதாக நாளை வரையறை செய்தீர் இனி என் சொலவல்லீர் என மாற்றியும்
விரித்தும் உரைத்தலுமாம். (81)
தழுவிய கிளைஞர் நட்டோர் சார்வுளோர் தக்க சான்றோர்
குழுவினைக் காக்க வேண்டுங் குறிப்பிலீர் போலு நீவிர்
ஒழுகுறு செயலி னாலே யுஞ்செய லுமக்கே சால
அழகிது போலு மென்னக் கழறினா ரதுகேட் டையன். |
(இ
- ள்.) நீவிர் ஒழுகுறு செயலினாலே - நீவிர் நடக்கலுற்ற
செய்கையாலே, தழுவிய கிளைஞர் நட்டோர் - சூழ்ந்துள்ள சுற்றத்தாரும்
நட்பினரும், சார்வுளோர் தக்க சான்றோர் - சார்ந்தவர்களும் தகுதி வாய்ந்த
பெரியாருமாகிய, குழுவினை - கூட்டத்தை, காக்கவேண்டும் குறிப்பிலீர்
போலும் - ஓம்பவேண்டுமென்னும் குறிப்புடையரல்லீர் போலும்; உம்செயல்
உமக்கே சால அழகிது போலும என்னக்கழறினார் - உமது செய்கை
உமக்கே மிகவும் அழகுடையது போலுமென்று இடித்துக் கூறினார்; ஐயன்
அது கேட்டு - அடிகள் அதனைக்கேட்டு.
சார்வுளோர்
- தம்மைப் பற்றுக்கோடாகச் சார்ந்திருக்கும் ஏனையோர்.
நுமது செய்கையை ஆராயின் குறிப்பிலீர் போலும் என்க. கழறுதல் - இடித்
துரைத்தல். போலும் இரண்டும் ஒப்பில்போலி. (82)
சுற்றமுந் தொடர்பு நீத்தேந் துன்பமு மின்பு மற்றேம்
வெற்றுடன் மானந் தீர்ந்தேம் வெறுக்கைமேல் வெறுக்கை வைத்தேம்
செற்றமுஞ் செருக்குங் காய்ந்தேந் தீவினை யிரண்டுந் தீர்ந்தேம்
கற்றைவார் சடையான் கோலங் காட்டியாட் கொண்ட வன்றே. |
(இ
- ள்.) கற்றைவார் சடையான் - திரண்ட நீண்ட சடையையுடைய
இறைவன், கோலம் காட்டி ஆட்கொண்ட அன்றே - தன் அருட்கோலத்தைக்
காட்டி அடிமை கொண்ட அப்பொழுதே, சுற்றமும் தொடர்பும் நீத்தேம் -
சுற்றத்தையும்ஏனைத் தொடர்புகளையும் துறந்தேம்; துன்பமும் இன்பும்
அற்றேம் - துன்பத்தையும் இன்பத்தையும் ஒழிந்தேம்; வெறு உடல் மானம்
|