24திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     வடு - தழும்பு. கண்ணுதல் பெயர் மாத்திரமாய் நின்றது. ஆடவர் -
வீரர் என்னும் பொருட்டு.

"ஆடவன் கொன்றான் அச்சோ"

என்பது பெரிய புராணம். (26)

பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துமான் றேரைச் சாய்த்தான்
பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துவெங் களிற்றை மாய்த்தான்
பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துவாம் பரியைக் கொன்றான்
பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துமா னுடரை வென்றான்.

     (இ - ள்.) பத்து அம்பு தொடுத்து - பத்துக்கணைகளை விடுத்து,
நூற்றுப்பத்து மான் தேரைச் சாய்த்தான் - குதிரை பூட்டிய ஆயிரந்தேரை
அழித்தான்; பத்து அம்பு தொடுத்து - பத்து அம்புகளை ஏவி, நூற்றுப்பத்து
வெங்களிற்றை மாய்த்தான் - ஆயிரங்கொடிய யானைகளைக் கொன்றான்;
பத்து அம்பு தொடுத்து - பத்து வாளிகளைத் தூண்டி, நூற்றுப்பத்து
வாம்பரியைக் கொன்றான் - ஆயிரம் தாவுங் குதிரைகளை மாய்த்தான்; பத்து
அம்பு தொடுத்து - பத்துப்பாணங்களைக்கடாவி, நூற்றுப்பத்து மானுடரை
வென்றான் - ஆயிரம் வீரர்களைக் கொன்றான். (27)

நூறம்பு தொடுத்து நூற்று நூறு * வெம் பரிமே லெய்தான்
நூறம்பு தொடுத்து நூற்று நூறுவெங் கரிமேற் பெய்தான்
நூறம்பு தொடுத்து நூற்று நூறுதேர் சிதைய விட்டான்
நூறம்பு தொடுத்து நூற்று நூறுசே வகரை யட்டான்.

     (இ - ள்.) நூற்றுநூறு வெம்பரி மேல் - வெவ்விய பதினாயிரங்
குதிரைகள் மேல், நூறு அம்பு தொடுத்து எய்தான் - நூறுகணைகளை
வில்லிற்பூட்டி விடுத்து (அவற்றை அழித்தான்); நூற்றுநூறு வெங்கரிமேல் -
கொடிய பதினாயிரம் யானைகளின் மேல், நூறு அம்பு தொடுத்துப் பெய்தான்
- நூறு வாளிகளை வில்லிற்பூட்டிப் பொழிந்து (அவற்றை அழித்தான்);
நூற்றுநூறு தேர்சிதைய நூறு அம்பு தொடுத்து விட்டான் - பதினாயிரந் தேர்
சிதையுமாறு நூறு அம்புகளை வில்லிற் றொடுத்து விட்டான்; நூறு அம்பு
தொடுத்து நூற்று நூறு சேவகரை அட்டான் - நூறு பாணங்களை ஏவிப்
பதினாயிரம் வீரர்களைக் கொன்றான். (28)

ஆயிரம் வாளி யானூ றாயிரம் பரியைக் கொன்றான்
ஆயிரம் வாளி யானூ றாயிரங் கரியை வென்றான்
ஆயிரம் வாளி யானூ றாயிரந் தேரைச் சாய்த்தான்
ஆயிரம் வாளி யானூ றாயிரம் பேரைத் தேய்த்தான்.

     (இ - ள்.) ஆயிரம் வாளியால் நூறாயிரம் பரியைக்கொன்றான் -
ஆயிரம் கணைகளினால் நூறாயிரம் குதிரைகளைக் கொன்றான்; ஆயிரம்
வாளியால் நூறாயிரம் கரியைவென்றான் - ஆயிரம் வாளிகளால் நூறாயிரம்


     (பா - ம்.) * நூறு நூறு (நான்கடியிலும்)