ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த
பாரெலாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை
சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி
நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்ட வன்றே. |
(இ
- ள்.) நீர் எலாம் சுமந்தவேணி நிருத்தன் - கங்கை நீர்
முற்றுந்தாங்கிய சடையினை யுடைய திருக்கூத்தனாகிய இறைவன்,
ஆட்கொண்ட அன்றே - அடிமை கொண்ட அப்பொழுதே, ஊர் எலாம்
அட்ட சோறு நம்மதே - ஊர் முற்றும் சமைத்த சோறு நம்முடையதே;
உவரி சூழ்ந்த பார் எலாம் பாயல் - கடல் சூழ்ந்த நிலவுலகு முற்றும் நமது
படுக்கையே; துன்னல் கோவணம் பரிக்கும் ஆடை - தைத்தகோவணம்
உடுக்கும் உடையே; சீர் எலாம் சிறந்த சாந்தம் தெய்வ நீறு - சீர்
அனைத்தாலும் சிறந்த சந்தனம் தெய்வத்தன்மை பொருந்திய திருநீறே;
அணி பூண்கண்டி - அணியும் அணி உருத்திராக்க மாலையே. அட்டசோறு,
பெயரெச்சம் செயப்படுபொருட் பெயர் கொண்டது.
நம்மதே,
மகரம் விரித்தல். உவரி, உவரையுடையது; இ வினை
முதற்பொருள் விகுதி. அட்டுண்டு வாழ்வார்க் கதிதிக ளெஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சியுடையவர் ஆகலின் ஊரெலா மட்டசோறு நம்மதே
என்றார். இவ்விருசெய்யுளிலும் போந்த கருத்துக்களிற் பலவும்,
"சின்னச் சீரை துன்னற் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடொன் றுதவுழி யெடுத்தாங்
கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளிமேவி யோவாத்
தகவெனு மரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயி ரனைத்தையு மொக்கப் பார்க்குநின்
செல்வக் கடவுட் டொண்டர்" |
எனத் திருவிடைமருதூர்
மும்மணிக்கோவையும் பயின்றுள்ளமை காண்க.
"ஆரங் கண்டிகை யாடையுங் கந்தையே" என்னும் திருத்தொண்டர்
புராணத்தொடரும் நோக்கற்பாலது. (85)
[எழுசீரடியாசிரியவிருத்தம்]
|
இறக்கினு
மின்றே யிறக்குக வென்று மிருக்கினு மிருக்குக வேந்தன்
ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே யூட்டினு மூட்டுக வானிற்
சிறக்கினுஞ் சிறக்க கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை
மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தான் மாற்றுவார் யாரென
மறுத்தார். |
|