கடலேழ்
என்றது உபசாரம்; சகரர் தொட்டது கிழக்குக் கடல் என்ப;
"குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தோன்று முதிர் பௌவத்தின் குடக்கும்" |
என்னும் புறப்பாட்டடிகளும்,
அவற்றின் உரையும் நோக்குக. சகரன்
என்னும் பரிதிகுல வேந்தன் துரங்க வேள்வி இயற்றிய காலை இந்திரன்
அவ்வேள்விக் குதிரையைப் பற்றிப் பாதலத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த
கபில முனிவரின் பின் புறத்தே ஒளித்து வைக்க, குதிரையின் பின் சென்ற
அஞ்சுமானால் அதனை யறிந்த சகரன் புதல்வன் அறுபதினாயிரவர் அதனை
மீட்பதற்காக நிலத்தைத் தோண்டிப் பாதல மடைந்தன ரென்பது வரலாறு. (4)
வரையறை
செய்த மூன்று வைகலுங் கழிந்த பின்னாட்
கரையறு பரிமா வீண்டக் கண்டில மின்ன மென்னா
விரையறை வண்டார் தண்டார் வேம்பனும் விளித்து வந்த
உரையறை நாவி னாரை யொறுப்பவ னொத்துச் சீறா. |
(இ
- ள்.) வண்டு அறை விரை ஆர்தண்தார் வேம்பனும் - வண்டுகள்
ஒலிக்கும் மணம் நிறைந்த தண்ணிய வேப்ப மலர் மாலையை யணிந்த
பாண்டியனும், வரை யறை செய்த மூன்றுவைகலும் கழிந்த பின்னாள் -
வரையறுத்துக் கூறிய மூன்று நாட்களும் கழிந்த வழிநாள், இன்னம் கரை
அறு பரிமா ஈண்டக் கண்டிலம் என்னா - இன்னும் அளவிறந்த குதிரைகள்
வரக் கண்டிலமென்று கருதி, விளித்து - அழைத்தலால், வந்த உரை அறை
நாவினாரை - வந்த (மாணிக்கம் போலுஞ்) சொற்களைக் கூறும்
நாவினையுடைய அவ்வமைச்சரை, ஒறுப்பவன் ஒத்துச் சீறா - தண்டிப்பவன்
போன்று சினந்து.
பரிமா,
இருபெய ரொட்டு. வண்டு அறை விரை ஆர் எனச் சொற்களை
மாறுக. தார் வேம்பன் என்பதில் விகுதி பிரித்துக் கூட்டுக. உரை -
திருவாசகம் என்னும் பொருட்டு.
என்னிவன்
பரிமாக் கொண்ட தென்றவை வருவ தென்னாத்*
தன்னெதிர் நின்ற வஞ்சத் தறுகணார் சிலரை நோக்கித்
கொன்னுமிக் கள்வன் றன்னைக் கொண்டுபோய்த் தண்டஞ் செய்தெம்
பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் போமி னென்றான். |
(இ
- ள்.) என் இவர் பரிமாக் கொண்டது - இவன் குதிரைகள்
வாங்கிய வாறு என்னே, அவை வருவது என்று என்னா - அவை வருதல்
எப்பொழுதோ என்று கூறி, தன் எதிர் நின்ற வஞ்சத்தறுகணார் சிலரை
நோக்கி - தனக்கெதிரில் நின்ற வஞ்ச மிக்க தறுகண்மை யுடைய
தண்டலாளர் சிலரைப் பார்த்து, கொன்னும் இக்கள்வன் தன்னைக் கொண்டு
போய் - (நினைக்கினும்) அச்சத்தைத் தரும் இத்திருடனைக் கொண்டு
(பா
- ம்.) * வருவ வென்னா.
|