விலங்கு பூட்டிச் சிறைப்படுத்தினாற்
போல, சங்கிலி நிகளம் பூட்டி -
சங்கிலியாகிய விலங்கினை பூட்டிச் சிறைப்படுத்தி, செங்கனல் சிதற நோக்கும்
சினம் கெழு காவலாளர் - சிவந்த நெருப்புப் பொறி சிதறப் பார்க்கும்
சினமிக்க தண்டலாளர், மங்குலின் இருண்ட கண்டர் தொண்டரை - முகில்
போலும் இருண்ட திருமிடற்றினையுடைய இறைவரது அடியாராகிய
வாதவூரடிகளை, மறுக்கம் செய்தார் - துன்பஞ்செய்தனர்.
கருஞ்சிறை
- பெரிய சிறை; இழிந்த சிறையுமாம். தவமே உருவாயினா
ரென்பார் தவத்தினைச் சிறையிட்டென்ன என்றார். காவலாளர் தொண்டரை
அறையிற் போக்கி நிகளம்பூட்டி மறுக்கஞ்செய்தார் என வினைமுடிவு
செய்க. (13)
மிடைந்தவர் தண்டஞ் செய்ய வெஞ்சிறை வெள்ளத் தாழ்ந்து
கிடந்தவர் கிடந்தோன் பூமே லிருந்தவன் றேடக் கீழ்மேல்
நடந்தவர் செம்பொற் பாத நகைமலர் புணையாப் பற்றிக்
கடந்தனர் துன்ப வேலை புலர்ந்தது கங்குல் வேலை.
|
(இ
- ள்.) அவர் மிடைந்து தண்டம் செய்ய - அத்தண்டலாளர்
நெருங்கி அங்ஙனம் ஒறுத்தலைப்புரிய, வெஞ்சிறை வெள்ளத்து ஆழ்ந்து
கிடந்தவர் - வெவ்விய சிறையாகிய கடலில் அழுந்திக் கிடந்த அடிகள்,
கிடந்தோன் - பாற் கடலிற் கிடந்த திருமாலும், பூமேல் இருந்தவன் -
தாமரை மலர் மேல் இருந்த பிரமனும், கீழ் மேல் தேட - முறையே கீழும்
மேலுந் தேடா நிற்க, நடந்தவர் - நீண்டவரது, செம்பொன் பாதநகைமலர் -
சிவந்த பொன்போன்ற திருவடியாகிய ஒளி பொருந்திய மலரை,
புணையாப்பற்றி - புணையாகப் பிடித்து, துன்ப வேலை கடந்தனர் -
துன்பமாகிய கடலைக்கடந்தனர்; கங்குல் வேலை புலர்ந்தது - இராக்காலம்
விடிந்தது.
பாற்கடலிற்
கிடந்தோன் என ஒரு சொல் வருவித்துரைக்க. கிடந்தவர்
பாதமலர் புணையாப்பற்றித் துன்பவேலை கடந்தனர் என முடிக்க. கங்குல்
வேலை என்பதில் வேலை - பொழுது. (14)
அந்தமி லழகன் றன்னை யங்கயற் கண்ணி யோடுஞ்
சுந்தர வமளிப் பள்ளி யுணர்த்துவான் றொண்டர் சூழ
வந்தனை செய்யு மார்ப்பு மங்கல சங்க வார்ப்பும்
பந்தநான் மறையி னார்ப்பும் பருகினார் செவிக ளார. |
(இ
- ள்.) அந்தம் இல் அழகன் தன்னை - அளவில்லாத
பேரழகனாகிய சோமசுந்தரக் கடவுளை, அங்கயற் கண்ணியோடும் -
அங்கயற் கண்ணம்மையுடன், சுந்தர அமளி - அழகிய படுக்கையினின்றும்,
பள்ளி உணர்த்துவான் தொண்டர் சூழ - துயிலுணர்த்துதற் பொருட்டு
அடியார்கள் நெருங்க, வந்தனை செய்யும் ஆர்ப்பும் - அவர்கள் வழிபடும்
ஒலியும், மங்கல சங்க ஆர்ப்பம் - மங்கலமாகிய சங்குகளின் ஒலியும்,
|