குதிரைச் சேவகராகி,
முன் செல்லுமின் - முன்னே செல்லுங்கள்; யாமும் -
நாமும், பாவகம்பட - (நோக்குவோர்க்குக் குதிரைச் சேவகர் என்னும்)
கருத்து உண்டாக, அப்படி வருதும் எனப் பணித்தான் - அவ்வாறே
வருவோம் என்று பணித்தருளினன்.
தா
வரும் எனப்பிரித்தலும் பொருந்தும். தாம், தாவும் என்பதன்
விகாரம். (27)
ஏக நாயக னாணைபூண் டெழுகணத் தவரும்
நாக நாடரும் வியப்புற நரியெலாந் திரட்டி
வேக வாம்பரி யாக்கியவ் வெம்பரி நடாத்தும்
பாக ராயினா ரவர்வரும் பரிசது பகர்வாம். |
(இ
- ள்.) ஏக நாயகன் ஆணை பூண்டு - ஒப்பற்ற இறைவனது
ஆணையை மேற்கொண்டு, எழுகணத்தவரும் - எழுந்த கணத் தலைவரும்,
நாக நாடரும் வியப்புற - வான நாடரும் வியப்புறுமாறு, நரி எலாம் திரட்டி
- நரிகளை எல்லாம் ஓரிடஞ் சேர்த்து, வேகவாம்பரி ஆக்கி - விரைவுள்ள
தாவுங் குதிரைகளாகச் செய்து, அவ்வெம்பரி நடாத்தும் - அந்த வேகமாகி
பரிகளை நடாத்துகின்ற, பாகராயினார் - சேவகராயினர்; அவர் வரும் பரிசது
பகர்வாம் - அப்பாகர் வருந் தன்மையைக் கூறுவாம்.
நாகநாடரும்
என்பதில் உம்மை சிறப்பு. பரிசது, அது பகுதிப் பொருள்
விகுதி. (28)
தூக்கி யார்த்தசெம் பட்டினர் சுரிகையர் தொடுதோல்
வீக்கு காலின ரிருப்புடற் காப்பினர் வெருளின்
நோக்கு பார்வையர் புண்டர நுதலின ரிடியிற்
றாக்கி யார்ப்பெழு நகையினர் தழன்றெழு சினத்தோர். |
(இ
- ள்.) தூக்கி ஆர்த்த செம்பட்டினர் - தூக்கிக்கட்டிய
செம்பட்டாடையை யுடையவர்; சுரிகையர் - உடைவாளை யுடையவர்;
தொடுதோல் வீக்கு காலினர் - தொடு தோல் கட்டிய காலையுடையவர்;
இருப்பு உடற் காப்பினர் - இருப்புக் கவசத்தினையுடையவர்; வெருளின்
நோக்கு பார்வையர் - (கண்டோர்) அஞ்சுமாறு பார்க்குங்
கண்களையுடையவர்; புண்டர நுதலினர் - திரிபுண்டர மணிந்த
நெற்றியினையுடையவர்; இடியில் தாக்கி ஆர்ப்பு எழு நகையினர் -
இடிபோலுந் தாக்கி ஒலி எழும் நகையினையுடையவர்; தழன்று எழு
சினத்தோர் - கொதித் தெழுஞ் சினத்தினையுடையவர்.
தொடுதோல்
- செருப்பு. உடற்காப்பு - கவசம். செம்பட்டினர்
முதலியோராய் ஆயினர் என்க. (29)
|