தறைவிழத் தனது சென்னி வீட்டினார் தம்மை நின்ற
குறையுடல் கைவேல் * குத்தி நூக்குவ குரவை பாடி
எறிபடு தலைகள் வாய்மென் றெயிறது கறித்து வீழ்ந்து
கறுவின மார்பந் தட்டி நிற்பன கவந்த யாக்கை. |
(இ
- ள்.) தனது சென்னி தறை விழ - தனது தலை தரையில் வீழ,
வீட்டினார் தம்மை - அறுத்து வீழ்த்தினவரை, நின்ற குறையுடல் - வீழாது
நின்ற கவந்தம், கைவேல் குத்தி நூக்குவ - கையிலுள்ள வேலாற்
குத்தித்தள்ளுவன; எறிபடு தலைகள் - அறுபட்ட தலைகள், குரவைபாடி -
குரவைப்பாட்டுப்பாடி, வாய் மென்று எயிறு கறித்து வீழ்ந்து கறுவின -
வாயினை மென்று பல்லைக்கடித்து வீழ்ந்து சினந்தன; கவந்த யாக்கை
மார்பம் தட்டிநிற்பன - குறையுடல்கள் மார்பைத்தட்டி நிற்பன.
தனது
: பன்மையிலொருமை. எயிறது, அது: பகுதிப்பொருள்
விகுதி (32)
ஒருவழிப் பட்டு வீழு மிருதலை யொன்றற் கொன்று
மருவிய கேண்மை யாகி வாலெயி றிலங்க நக்குப்
பிரிவற வந்தாய் நீயு மென்றெதிர் பேசிப் பேசிப்
பரிவுற மொழிந்து மோந்து பாடிநின் றாடல் செய்த. |
(இ
- ள்.) ஒருவழி பட்டு வீழும் இருதலை - ஓரிடத்தில் அறுபட்டு
வீழ்கின்ற இரண்டு தலைகள், ஒன்றற்கு ஒன்று கேண்மை மருவிய ஆகி -
ஒன்றற்கொன்று நட்பினைப்பொருந்தியனவாய், வால் எயிறு இலங்க நக்கு -
வெள்ளியபற்கள் விளங்கச் சிரித்து, பிரிவு அற நீயும் வந்தாய் என்று எதிர்
பேசிப்பேசி - பிரிவின்றி நீயும் வந்தாயென்று எதிரெதிரே பேசி, பரிவு
உறமொழிந்து மோந்து - அன்பு மிக (வேறு செய்திகளையும்) கூறி
ஒன்றையொன்று மோந்து, பாடி நின்று ஆடல் செய்த - பாடி நின்று
ஆடின.
செய்த
: அன்பெறாத பலவின்பால் முற்று. (33)
மாகவா றியங்கு சேனம் வல்லிருட் குவையி னன்ன
காகம்வன் கழுகு வெம்போர்க் களனிடை யவிந்து வீழ்ந்தோர்
ஆகமேற் சிறக டிக்கொண் டசைவன வேடை நீக்கப்
பாகநின் றால வட்டம் பணிப்பன போன்ற வன்றே. |
(இ
- ள்.) மாக ஆறு இயங்குசேனம் - வானின் வழியே உலாவும்
பருந்துகளும், வல் இருட்குவையின் அன்னகாகம் - செறிந்த இருளின்
திரட்சியை ஒத்த காக்கைகளும், வன்கழுகு - வலிய கழுகுகளும்,
வெம்போர்க்களன் இடை அவிந்து வீழ்ந்தோர் - கொடிய போர்க்களத்தின்
கண் இறந்து வீழ்ந்தவர்களின், ஆகம் மேல் - உடல்களின் மேல், சிறகு
அடிக்கொண்டு அசைவன - சிறகுகளை அடித்து அசைதல்,
(பா
- ம்.) * கேண்மைத்தாகி
|