வம்மின் - விரைந்து
வாருங்கள்; அன்பரை - மணிவாசகனாரை, வேந்து
ஒறுக்கும் நோய் களைவான் என - பாண்டியன் ஒறுக்குந் துன்பத்தினைப்
போக்குதற்பொருட்டு வருதல் போல, ஒருவன் நும்பிறவி அறுக்கவந்தனன் -
இறைவன் நுமது பிறப்பினை ஒழிக்க வந்தனன்; என்ப போல் - என்று
சொல்லுவபோல், பரிச்சிலம்பு அலம்ப - குதிரைச் சிலம்புகள் ஒலிக்கவும்.
இம்மென,
விரைவுக் குறிப்பு.
"செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்
றென்னனன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வா ளுறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை யெதிர்ந்தார் புரள விருநிலத்தே" |
என்னும் திருவாசகம்
இங்கே சிந்திக்கற் பாலது. ஒருவனும் எனக்
கொண்டுரைத்தலுமாம். இது தற்குறிப்பேற்றவணி. (39)
கங்கை யைச்சடை முடியின்மேற் கரந்தனை யவள்போல்
எங்க டம்மையுங் கரந்திடென் றிரந்துகா வேரி
துங்க பத்திரை யாதியா நதிகளுஞ் சூழப்
பொங்கி வீழ்வபோ லொலியலுங் கவரியும் புரள. |
(இ
- ள்.) கங்கையைச் சடை முடியின் மேல் கரந்தனை -
கங்கையைச் சடை முடியின்மேல் ஒளித்தருளினை; அவள் போல் எங்கள்
தம்மையும் கரந்திடு என்று இரந்து - அவளை ஒளித்தது போல எங்களையும்
ஒளித்தருளுவாயாக என்று குறையிரந்து, காவேரி துங்கபத்திரை ஆதியாம்
நதிகளும் - காவேரியும் துங்கபத்திரையு முதலாகிய நதிகளும், சூழப் பொங்கி
வீழ்வதுபோல் - சூழவும் பொங்கி வீழ்வன போல, ஒலியலும் கவரியும் புரள
- மேலாடையுஞ் சாமரையும் புரளவும்.
ஒலியல்
- ஈச்சோப்பி என்பாரு முளர்; ஈச்சோப்பி - ஈயோட்டுங்
கருவி. தற்குறிப்பணி. (40)
வாவி நாறிய வாலிதழ்த் தாமரை மலரோன்
நாவி னாளுமை நாயக னான்மறை பரியா
மேவி னானெனத் தானொரு வெண்குடை யாகிப்
பாவி னாலென முடியின்மேற் பானிலாக் கால.
|
(இ
- ள்.) வாவி நாறிய வால் இதழ்த் தாமரை மலரோன் -
தடாகத்தின் கண் தோன்றிய தூய இதழ்களை யுடைய தாமரை மலரில்
இருப்பவனாகிய பிரமனது, நாவினாள் - நாவில் வசிக்குங் கலைமகள்,
உமை நாயகன் நான் மறை பரியா மேவினான் என - உமைகேள்வனாகிய
சோமசுந்தரக் கடவுள் நான்கு மறைகளையும் குதிரையாகக் கொண்டு
வந்தனன் என்று கருதி, தான்
|