262திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பள்ள மாக்குவ திடரினைப் பள்ளத்தை மேடு
கொள்ள வாக்குவ பாரெலாம் விலாழிகொப் பளித்து
வெள்ள மாக்குவ தூளியால் வெள்ளத்தை வெறிதாய்
உள்ள தாக்குவ புள்ளுவ வுருக்கொண்ட பரிமா.

     (இ - ள்.) புள்ளுவ உருக்கொண்ட பாமா - வஞ்சக வடிவங்கொண்ட
குதிரைகள், திடரினைப் பள்ளமாக்குவ - மேட்டினைப் பள்ளம் ஆக்குவன;
பள்ளத்தைமேடு கொள்ள ஆக்குவ - பள்ளத்தை மேடாகுமாறு ஆக்குவன;
பார் எலாம் விலாழி கொப்பளித்து வெள்ளம் ஆக்குவ - புவி முழுதும் வாய்
நுரையைக் கொப்பளித்தலால் வெள்ளமாக்குவன; தூளியால் - குரத்தில்
எழும் புழுதியால், வெள்ளத்தை வெறிதாயுள்ளது ஆக்குவ - வெள்ளத்தைச்
சுவற்றி நிலமாக்குவன.

     விலாழி - குதிரை வாய் நுரை. வெறிதாயுள்ளது - வெறுநிலம். (44)

கொய்யு ளைப்பரி யெழுந்ததூள் கோப்பவான் கங்கை
வையை யொத்ததேழ் பசும்பரி செம்பரி மாவாச்
செய்த தொத்தது சிந்துரந் திசைக்கய முகத்துப்
பெய்த தொத்ததா லொத்தது பெரும்பகன் மாலை.

     (இ - ள்.) கொய் உளைப்பரி எழுந்ததூள் கோப்ப - கொய்த
புறமயிரினை யுடைய குதிரைகளால் எழுந்த புழுதி எங்குங்கோத்தலினால்,
வான் கங்கை வையை ஒத்தது - ஆகாய கங்கை வையையாற்றினை ஒத்தது;
ஏழ் பசும் பரி - சூரியனுடைய ஏழு பச்சைக் குதிரைகளும், செம்பரிமாவாச்
செய்தது ஒத்தது - செய்ய குதிரைகளாகப் படைக்கப்பட்டமை ஒத்தது;
திசைக்கயம் சிந்துரம் முகத்துப் பெய்தது ஒத்தது - திக்கு யானைகள்
சிந்துரத்தை முகத்திற் பெய்ததை ஒத்தது; பெரும்பகல் மாலை ஒத்தது -
நடுப்பகல் மாலைப்பொழுதை ஒத்தது.

     பரி, கயம் என்னும் சாதிபற்றி ஒருமை வினை கொடுத்தார். (45)

விளம்பு கின்றவச் சம்புவெம் பரித்திரண் மிதிக்குங்
குளம்பு கிண்டிய வெழுந்ததூள் குன்றிற கரிந்தோன்
வளம்பு குந்தடை வார்குர வழிபுரி வேள்விக்
களம்பு கைந்தெழு தோற்றமே யல்லது கடாதால்.

     (இ - ள்.) விளம்புகின்ற அச்சம்பு வெம்பரித்திரள் - கூறப்படுகின்ற
அந்த நரியாகிய வெவ்விய குதிரைக் கூட்டங்கள், மிதிக்கும் குளம்பு
கிண்டிய எழுந்த தூள் - மிதிக்கின்ற குளம்பு கிண்டுதலால் புழுதி எழுந்த
தோற்றத்தை, குன்று இறகு அரிந்தோன் வளம்புகுந்து அடைவார் -
மலைகளின் சிறகுகளை அரிந்த இந்திரன் பதவியிற்சென்றடையுங்
கருத்தினையுடையார், குரவழிபுரி வேள்விக் களம் பகைந்து எழுதோற்றமே
அல்லது - குதிரையின் குளம்புப்பட்ட இடந்தோறும் புரிகின்ற வேள்விச்