(இ
- ள்.) சித்தர் விளையாடலின் - சித்தருடைய விளையாட்டுப்
போல, உத்தர திசைப்புரவி - வடதிசையிலுள்ள குதிரைகள், தெற்கு
அடையுமாறும் - தென்றி சையை அடையும் வகையும், தெற்கு உள
அத்தகைய - தெற்கின் கண் சென்றுள்ள அங்ஙனமாய அவை, வடக்கு
அடையுமாறும் - வடக்கின்கண் அடையும் வகையும், அத்தகை குடக்கொடு
குணக்கு அடையுமாறும் - அங்ஙனமே கிழக்குத் திசையினின்று மேற்கிலும்
மேற்கிலிருந்து கிழக்கிலும் செல்லுந் தன்மையும், வெளிப்படுதல் செய்யா -
தோன்றவில்லை (என்றும்).
குடக்கொடு
குணக்கடைதல் - கிழக்கிலிருந்து மேற்கிலும்
மேற்கிலிருந்து கிழக்கிலும் அடைதல். (51)
மறைமரவு சாலவரும் வன்னியிவை பொன்னித்
துறைவனுள முஞ்சுடு மிரும்பனை தொடுக்கும்
அறவனுள முஞ்சுடு மமைச்சரை யொறுக்கும்
இறைவழுதி யுள்ளமு மினிச்சுடுவ தென்பார். |
(இ
- ள்.) மறை மரபு சாலவரும் வன்னி இவை - பரிநூலிற் கூறும்
இலக்கணங்கள் நிரம்பவராநின்ற இக்குதிரைகளாகிய நெருப்பு,
பொன்னித்துறைவன் உளமும் சுடும் - காவிரியின் நீர்த்துறையினையுடைய
சோழன் மனத்தையுஞ்சுடும்; இரும்பனை தொடுக்கும் - கரிய பனையின்
மலராற்றொடுத்த மாலையை யணிந்த, அறவன் உளமும் சுடும் - சேரன்
உள்ளத்தையும் சுடும்; இனி - மேல், அமைச்சரை ஒறுக்கும் - வாதவூரடிகளை
வருத்தும், இறை வழுதி உள்ளமும் சுடுவது என்பார் - பாண்டி மன்னன்
உள்ளத்தையும் சுடும் என்றுங் கூறுவாராயினர்.
மறை
என்றது ஈண்டுப் புரவிநூலை. வன்னி - குதிரை, தீ; இரட்டுற
மொழிதல். குதிரையைத் தீயாக உருவகித்துச் சுடும் என்றார். இருமை -
கருமை. பாண்டியற்கு மாற்றாராகலின் சோழனுளத்தையும் சேரனுளத்தையும்
சுடுமென்றார். வாதவூரரை ஒறுத்தமை பற்றிப் பாண்டியன் தானே வருந்துவ
னென்பார் வழுதியுள்ளமு மினிச்சுடுவதென்பார் என்றார். முன் இரண்டு
செய்யுட்களையும் இதிலுள்ள என்பார் என்பதனோடு முடிக்க. (52)
முந்தையொரு மந்திரி பொருட்டரசன் முன்னா
அந்தமி லனீகமொ டரும்பரியில் வந்தாங்
கிந்தமறை மந்திரி யிடும்பைதணி விப்பான்
வந்தனர்கொ லிப்பரி வரும்பொருந ரென்பார். |
(இ
- ள்.) முந்தை ஒரு மந்திரி பொருட்டு - முன்னொரு காலத்தில்
சௌந்தர சாமந்தன் என்னும் ஒரு சேனைத் தலைவன் பொருட்டு, அரசன்
முன்னா - பாண்டியன் முன்னே, அந்தமில் அனீகமொடு - அளவிறந்த
சேனைகளோடு, அரும்பரியில் வந்தாங்கு - அரிய புரவிமீது வந்ததுபோல,
இப்பரி வரும் பொருநர் - இக் குதிரையில் வரும் வீரர், இந்த மறை மந்திரி
|