இடும்பை தணிவிப்பான்
- இன்று இந்த மறையவராகிய மந்திரியாரின்
துன்பத்தைத் தணிவித்தற் பொருட்டு, வந்தனர் கொல் என்பார் - வந்தனரோ
என்றுங் கூறுவார்.
அமைச்
சுரிமையும் தானைத் தலைமையும் ஒருங்குடையாரு
முளராகலின் மந்திரி பொருட்டு என்றார். சௌந்தர சாமந்தர் பொருட்டு
இறைவன் பரியில் வந்தமையை முன் மெய்க்காட்டிட்ட படலத்திற் காண்க.
தணிவிப்பான், வினையெச்சம். (53)
காமனிவ னேகொலறு காலுழு கடப்பந்
தாமனிவ னேகொல்பொரு தாரகனை வென்றோன்
மாமனிவ னேகொன்மலை வன்சிற கரிந்த
நாமனிவ னேகொலென நாரிய ரயிர்த்தார். |
(இ
- ள்.) இவன் காமன் கொல் - இக்குதிரை வீரனாகிய பேரழகன்
மதவேளோ, இவன் - (அன்றி) இவ்விளையோன், அறு கால் உழு கடப்பம்
தாமன் கொல் - வண்டுகள் கிளறுங் கடப்ப மாலையை யணிந்த முருகனோ,
இவன் - (அன்றி) நம்மனத்தைத் தனது மாயையினால் கவருமிவன்,
பொருதாரகனை வென்றோன் மாமன் கொல் - போர் புரிந்த தாரகனைக்
கொன்ற அம்முருகக் கடவுளின் மாமனாகிய மாயனோ, இவன் - (அன்றி)
பெரும் போகமுடைய இவன், மலை வன் சிறகு அரிந்த நாமன் கொல் என
- மலைகளின் வலிய சிறகினை அரிந்த இந்திரனோ என்று, நாரியர்
அயிர்த்தார் - பெண்கள் ஐயுற்றனர்.
அறுகால்
- ஆறாகிய கால்களை யுடையது; வண்டு. பொருதாரகனை
வென்றோன். சுட்டு மாத்திரையாகக் கொள்க. நாமன் - பகைவர்க்கு
அச்சத்தைச் செய்பவன். (54)
அடுத்திடுவர் கண்ணிறையை வண்ணலழ கெல்லாம்
மடுத்திடுவர் கைவளையை மாலைவிலை யென்னக்
கொடுத்திடுவர் மாலைகள் கொடுத்திடுதி யன்றேல்
எடுத்திடுதி யெங்கள்வளை யெங்கள்கையி லென்பார்.
|
(இ
- ள்.) அடுத்திடுவர் கண்நிறைய அண்ணல் அழகு எல்லாம்
மடுத்திடுவர் - (அம்மகளிரிற் சிலர் அவ்வண்ணலை) அடுத்து அவன் அழகு
அனைத்தையும் கண்ணாகிய வாயினால் நிறையப் பருகுவர்; கைவளையை
மாலைவிலை என்னக்கொடுத்திடுவர் - கையிலுள்ள வளைகளை மாலைக்கு
விலையெனக் கொடுப்பர்; மாலைகள் கொடுத்திடுதி - நின் மார்பிலணிந்த
மாலைகளைக் கொடுப்பாயாக; அன்றேல் - கொடாயேல், எங்கள் வளை
எடுத்து - (அவற்றின் விலையாகக் கொடுத்த) எங்கள் வளைகளை எடுத்து,
எங்கள் கையில் இடுதி என்பார் - எங்கள் கையில் இடுவாயாக என்று
கூறுவர்.
|