[கலிநிலைத்துறை]
|
இச்சை யால்வடி
வெடுப்பவ னிந்திர சால
விச்சை காட்டுவா னெனப்பரி வீரனி லுலகைப்
பிக்க தேற்றிட மயக்கியுங் காமனிற் பெரிது
நச்சு* மாதரை மயக்கியு மிங்ஙன நடந்தான். |
(இ
- ள்.) இச்சையால் வடிவு எடுப்பவன் - தனது இச்சையளவானே
திருவுருவமெடுக்கும் இறைவன், இந்திரசால விச்சை காட்டுவான் என -
இந்திரசால வித்தை காட்டுவானைப்போல, பரிவீரனில் - குதிரை
வீரனைப்போல் (தன்னைக் காட்டி), உலகைப் பிச்சு ஏற்றிட மயக்கியும் -
உலகினர் பித்தை ஏற்குமாறு அவரை மயக்கியும், காமனில் -
மதவேளைப்போல் (காணப்பட்டு), பெரிது நச்சு மாதரை மயக்கியும் -
மிகவும் விரும்பும் மகளிரை மயக்கியும், இங்ஙனம் நடந்தான் - இவ்வாறு
நடந்தருளினன்.
இறைவன்
வினைவயத்தாற் பிறத்தலின்றித் தான் விரும்பிய வடிவை
விரும்பியவாறு எடுப்பவனாகலின் இச்சையால் வெடுப்பவன் என்றார்.
விச்சை காட்டுவான் என மயக்கியும், மயக்கியும் நடந்தான் என்க. விச்சை,
பிச்சு என்பன போலி. பிச்சது, அது பகுதிப்பொருள் விகுதி. ஏற்றிட - ஏற்க. (58)
தாவு கந்துக மிந்திய மொத்தன சயமா
வாவு திண்கண மள்ளர்கண் மனங்களை யொத்தார்
மேவி யம்மனந் தொறுமிடை விடாதுநின் றியக்கும்
ஆவி யொத்தது நடுவரு மருமறைப் பரியே. |
(இ
- ள்.) தாவு கந்துகம் இந்தியம் ஒத்தன - தாவுகின்ற குதிரைகள்
ஐம்பொறிகளை ஒத்தன; சயமா வாவு திண் கண மள்ளர்கள் - வெற்றி
பொருந்திய அக்குதிரைகளை நடாத்தும் திண்ணிய வீரர்களாகிய
சிவகணத்தவர், மனங்களை ஒத்தார் - மனங்களை ஒத்தனர்; அம்மனந்
தொறும் மேவி நின்று - அம்மனங்கடோறும் பொருந்தி நின்று, இடைவிடாது
இயக்கும் ஆவி - இடையறாமல் இயக்குகின்ற உயிரினை, நடுவரும்
அருமறைப்பரி ஒத்தது - நடுவில் வரும் - அரிய வேதமாகிய குதிரை
ஒத்தது.
வாவு
சயமா என மாறுக. மனம் கூடாவழி்ப் பொறிகள் புலன்களிற்
செல்லாமையானும், ஆன்ம வறிவின்றி மனத்திற்கு இயக்க மின்மையானும்,
கந்துகம் இந்திய மொத்தன, மள்ளர்கள் மனங்களை யொத்தார், மறைப்பரி
ஆவி யொத்தது என்றார். மறைப்பரி என்றது இலக்கணையால் இறைனைக்
குறிக்கும். (59)
(பா
- ம்.) * நச்ச.
|