(இ
- ள்.) மன்னவன் நெறிகோடா மந்திரர் அடல் ஏறே -
பாண்டியனது அரசியல் நெறியினின்றும் வழுவாத அமைச்சர்களுள் வெற்றி
பொருந்திய ஆண் சிங்கம் போன்றவரே, முந்நீர் பல் நிற எழு பரவைகள்
வருமாபோல் - மூன்று நீர்களை யுடைய பல நிறமுள்ள எழு கடல்களும்
வருந் தன்மையைப் போல, உள துரகதம் எல்லாம் - உலகிலுள்ள குதிரைகள்
அனைத்தும், துன்னிய வருகின்ற - நெருங்கி வருகின்றன; இது போதில் -
இப்போது, பொன் எயில் மணிவாயில் புகுவன - பொன்னலாகிய மதிலின்
அழகிய வாயிலின் கண் புகுதா நிற்கும்.
குதிரைகளும்
பல நிறத்த வாகலின் பன்னிற . . . . பரவைகள்
என்றார். துன்னி வருகின்ற துரகதமான வெல்லாம் இது போதில் புகுவன
என்றுரைத்தலுமாம். (62)
ஒல்லையி லதுமன்னற் குரையுமி னெனமேரு
வில்லவ னருள்பெற்ற வேதியர் பெருமான்போய்ச்
செல்லது தளையிட்ட திருமக னருகெய்தி
மல்லணி திணிதோளாய் வருவன பரியென்றார். |
(இ
- ள்.) அது ஒல்லையில் மன்னற்கு உரையுமின் என - அதனை
விரைவில் வேந்தனுக்கு விளம்புவீராக என்று கூற, மேரு வில்லவன் அருள்
பெற்ற - மேரு மலையை வில்லாக வுடைய இறைவனது திருவருளைப் பெற்ற,
வேதியர் பெருமான் போய் - மறையவர் தலைவராகிய அடிகள் சென்று,
செல்லது தளை இட்ட திருமகன் அருகு எய்தி - முகிலை விலங்கு பூட்டிச்
சிறைப்படுத்திய பாண்டியன் பக்கலிற் சென்று, மல் அணி திணி தோளாய் -
மற்போர் வல்ல அழகிய திண்ணிய தோளையுடைய மன்னா, பரிவருவன
என்றார் - குதிரைகள் வருகின்றன என்று கூறினர்.
செல்லினைத்தளையிட்டவன்
வழிவந்தோனாகலின் தளையிட்ட
திருமகன் என்றார். செல்லது, அது பகுதிப் பொருள் விகுதி. வருவன -
வாராநின்றன. (63)
மருத்தென வருகின்ற மாக்கட லெனமன்னன்
திருத்தணி கடகப்பூண் டெறித்திட வுடல்வீங்கிப்*
பெருத்தெழு மகிழ்தூங்கிப் பெருவிலை மணியாரம்
அருத்திகொள் கலைநல்கி யமைச்சரை மகிழ்வித்தான். |
(இ
- ள்.) மாக்கடல் மருத்துஎன வருகின்ற என - குதிரை வெள்ளம்
காற்றைப்போல விரைந்து வருகின்றன என்று கூற, மன்னன் - அரிமருத்தன
பாண்டியன், திருத்து அணி கடகப்பூண் தெறித்திட - திருத்திய அழகிய
கடகமாகிய அணி தெறிக்குமாறு, உடல் வீங்கி - உடல் பூரித்து, பெருந்து
எழு மகிழ்தூங்கி - ஓங்கி எழுந்த மகிழ்ச்சி மீதூர்ந்து, பெருவிலை மணி
ஆரம் - பெரிய விலையுள்ள முத்து மாலைகளையும், அருத்தி கொள்கலை
(பா
- ம்.) * உடல் வீங்க.
|