பா
- செய்யுளுறுப்புக்களுள் ஒன்று; அஃதாவது சேட்புலத்திலிருந்து
ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால் இஃது இன்ன
செய்யுள் என அறிதற்கு ஏதுவாய் பரந்து பட்டு வரும் ஓசை. பனுவல் -
பாட்டு பதிகமுமாம். ஆவா, இரக்கப் பொருள் படும் இடைச்சொல்.
"தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா வென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே" |
எனவும்,
"பஞ்சே ரடியாள் பாகத் தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சே லென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே" |
எனவும் திருவாசகம்
ஆசைப்பத்துள் அடிகள் அருளிச் செய்தல் காண்க.
ஆவா வென்னா என்னும் பாடத்திற்கு ஆவா என்றிரங்கி எனப் பொருள்
கூறுக. (68)
நெஞ்சே யுரையே
செயலே யெல்லா நினவென்றாய்
வஞ்சே போலு மஃதே லின்று வாராயோ
பஞ்சே ரடியாள் பாகா கூடற் பரமேட்டீ
அஞ்சே லென்னா யிதுவோ* வருளுக் கழகையா. |
(இ
- ள்.) நெஞ்சே உரையே செயலே எல்லாம் நின என்றாய் -
உள்ளமும் உரையும் உடலுமாகிய அனைத்தும் உன்னுடையன என்று
கூறியருளினை; வஞ்சே போலும் - அது பொய்யே போலும்; அஃதேல்
இன்று வாராயோ - அஃது உண்மையானால் இப்பொழுது வராதிருப்பாயோ,
பஞ்சு ஏர் அடியாள் பாகா - செம்பஞ்சுக்குழம்பு ஊட்டிய அழகிய
திருவடிகளையுடைய பிராட்டியாரை ஒரு கூற்றிலுடையவனே, கூடல்
பரமேட்டீ - கூடலில் எழுந்தருளிய இறைவனே, அஞ்சேல் என்னாய் -
அஞ்சற்க என்று அருளுகின்றாயில்லை; ஐயா - ஐயனே, இதுவோ
அருளுக்கு அழகு - இங்ஙனம் வாளாவிருப்பதோ நின்னருளுக்கு அழகாகும்
(ஆகாது.)
வஞ்சகம்
என்பது வஞ்சு எனக் கடைக்குறையாயிற்று. (69)
காவி நேருங்
காண்டா நாயிற் கடையான
பாவி யேனைப் பொருளாக் கொண்டென் பணிகொண்டாய்
ஆவி யோடிவ் வுடலு நினதே யன்றோவின்
றோவி வாளா திருந்தா லாரென் னுடையானே. |
(இ
- ள்.) காவிநேரும் கண்டா - நீலோற்பல மலரை ஒத்த
திருமிடற்றினை யுடையவனே, நாயில் கடையான பாவியேனை - நாயினுங்
கடைப்பட்ட பாவியாகிய என்னையும், பொருளாக்கொண்டு என்பணி
(பா
- ம்.) * அஞ்சே லென்னா விதுவோ.
|