ஐங்கதி
- மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி
என்பன; இவற்றுள் சரகதி நீக்கி இடபகதி கொள்வாரும், பிறவாறு வேறுபட
வுரைப்பாருமுளர். சாரி - குதிரை நடை. சுக்கிரநீதி இரண்டாம்
அத்தியாயத்தில் குதிரை நடை பதினொரு வகையாகவும், நான்காம்
அத்தியாயத்தில் ஆறுவகையாகவும் கூறப்பட்டுள. இவ்வாசிரியர்
பதினெட்டாகக் கூறுகின்றனர். தொகுத்தும்விரித்தும்கூறு முறைபற்றி
நூல்கடோறும் இங்ஙனம் வேறுபடுவன பலவுள. திசைப்புலத்தவர் -
எண்டிக்கிலுள்ளாரும் என்றுமாம். தாம் அசைவற இருந்தே எல்லாவுலகமும்
அசைக்க வல்லவர் தாமும் அசைந்து ஓர் குதிரையை அசைப்பது
வியப்பின்றென்பார் மேற் கொண்டசைத்தனரசைவற் றெல்லாவுலகமு மசைக்க
வல்லார் என்றார். (77)
ஆண்டகை
யவர்போ னின்ற வடுகணத் தவருந்தத்தங்
காண்டகு புரவி யெல்லா நடத்தினர் காட்டக் கண்டு
பாண்டிய னவரை நோக்கி நுங்களிற் பதியாந்தன்மை
பூண்டவர் யாவ ரென்றா னிவரென்றார் புரவிவீரர். |
(இ
- ள்.) ஆண்தகை அவர் போல் - ஆண்டன்மையையுடைய
அவ்விறைவர் நடத்திக் காட்டினமைபோல், நின்ற அடுகணத்தவரும் -
சூழ்ந்து நின்ற வெற்றி மிக்க சிவகணத்தவராகிய குதிரை வீரரும், தத்தம்
காண் தகுபுரவி எல்லாம் நடத்தினர் காட்ட - தங்கள் தங்கள் அழகிய
குதிரைகள் அனைத்தையும் நடத்திக்காட்ட, பாண்டியன் கண்டு - பாண்டியன்
அதனைக்கண்டு, அவரை நோக்கி - அவர்களைப் பார்த்து, நுங்களில்
பதியாம் தன்மை பூண்டவர் யாவர் என்றான் - உங்களுள்ளே தலைமைத்
தன்மை பூண்டவர் யாவர் என்று வினவினன்; புரவிவீரர் இவர் என்றார் -
குதிரைவீரர் இவரென்று காட்டினர்.
காண்டகு
- காணத்தக்க; அழகு பொருந்திய. நடத்தினர், முற்றெச்சம்.
(78)
சுட்டுதற்
கரிய சோதி சுருதிவாம் புரவி யோடு
மட்டவிழ் தாரி னான்முன் வருதலுங் கருணை நாட்டம்
பட்டுள மயங்கித் தன்னை மறந்தெழீஇப் பாண்டி வேந்தன்
தட்டவிழ் கமலச் செங்கை தலைமிசைப் கூப்பி நின்றான். |
(இ
- ள்.) சுட்டுதற்கு அரிய சோதி - சுட்டுதற்கரிய பரஞ்சோதியாகிய
இறைவர், வாம்சுருதிப் புரவியோடு - தாவுகின்ற வேதப்பரியுடன், மட்டு
அவிழ்தாரினான் முன்வருதலும் - மணம் விரிந்த வேப்பமலர்
மாலையைணியந்த பாண்டியன் முன் வந்த வளவில், கருணை நாட்டம்பட்டு -
அவரது அருட் பார்வைபடுதலால், உளம் மயங்கி - மனமயங்கி, தன்னை
மறந்து எழீஇ - தன்னை மறந்து எழுந்து, பாண்டி வேந்தன் - அப்பாண்டிய
மன்னன், தட்டு அவிழ் கமலச் செங்கை - தட்டம் போல் மலர்ந்த தாமரை
மலர்போன்ற சிவந்த கைகளை, தலைமிசைக் கூப்பி நின்றான் - தலையின்
மேற் குவித்து நின்றனன்.
|