நரி பரியாக்கிய படலம்279



     சுட்டுதற்கரிய - மாற்றம் மனம் கழிய நின்ற; சுட்டறிவைக் கடந்துநின்ற;
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்றியம்ப வொண்ணாத. பட்டு -
படுதலால்; எச்சத்திரிபு. தட்டு - தட்டம், வட்டில்; இதழுமாம். தான்
அரசனென்பதனை மறந்து கூப்பி நின்றான். (79)

பின்னவ னாணை யாலே மறைப்புண்ட பெருநீர்க் கடன்
மன்னவ னறிவு தோன்ற வின்றொரு வயமா வீரன்
தன்னைநாங்கண்டெ ழுந்து தடங்கரங் கூப்பி நின்ற
தென்னெனத் தவிசின் மீன விருந்திட நாணி நின்றான்.

     (இ - ள்.) பின் அவன் ஆணையால் மறைப்புண்ட - பின்
அவ்விறைவன் ஆணையினால் மறைக்கப்பட்ட, பெருநீர்க்கூடல் மன்னவன் -
வையையாறு சூழ்ந்த நான் மாடக் கூடலின் மன்னவனாகிய பாண்டியன்,
அறிவு தோன்ற - தன்னறிவு தோன்ற, இன்று - இப்பொழுது, ஒரு
வயமாவீரன் தன்னைக்கண்டு - ஒரு வெற்றி மிக்க குதிரை வீரனைப்பார்த்து,
நாம் எழுந்து தடம் கரம் கூப்பி நின்றது என்என - நாம்
சிம்மாசனத்தினின்றும் எழுந்து பெரிய கைகளைத் தலைமேற் குவித்து
வணங்கி நின்றது என்னே என்றுகருதி, மீள - மீண்டும், தவிசின் இருந்திட
நாணி நின்றான் - அவ்வாதனத்தின்கண் அமருவதற்கு வெள்கி நின்றனன்.

     மறைப்புண்ட - பழைய அறிவு மறைக்கப்பெற்றுத் தன்னை
மறந்திருந்த, பெருநீர், ஆகுபெயர். ஆணையாலே அறிவுதோன்ற என்க.
அறிவு - பழைய பாச அறிவு. (80)

நிற்கின்றான் முகத்தை நோக்கி நேர்நின்ற மறைமா வீரர்
பொற்குன்றாம் புயத்தா யுன்றன் பொருளெலாங் கொண்டு போந்துன்
சொற்குன்றா வமைச்சன் றானே நமக்குநஞ் சூழ னீங்கா
மற்குன்றா நமர்க்கு மார வழங்கினான் வழங்க லாலே.

     (இ - ள்.) நிற்கின்றான் முகத்தை நோக்கி - அங்ஙனம் நிற்கும்
பாண்டியன் முகத்தைப் பார்த்து, நேர் நின்ற மறைமாவீரர் - அவனெதிரே
நின்ற வேதப் பரியினையுடையவீரர், பொன்குன்று ஆம்புயத்தாய் -
பொன்மலைபோலுந் தோளையுடையாய், உன்றன் பொருள் எலாம்
கொண்டுபோந்து - உன்றன் பொருள் எலாம் கொண்டுவந்து, உன்சொல்
குன்றா அமைச்சன் - உனது சொல்லைக் கடவாத அமைச்சனாகிய
வாதவூரன், தானே - தானாகவே, நமக்கும் - எமக்கும், நம் சூழல் நீங்கா
மல் குன்றா நமர்க்கும் - எமது அருகினின்றும் நீங்காத வலிகுறையாத
பரிசனங்கட்கும், ஆரவழங்கினான் - தெவிட்டக் கொடுத்தனன்; வழங்கலால்
- அங்ஙனம் கொடுத்தலினால்.

     மறைமாவீரர் என்பது மேல் ‘பரிவிலை வழக்கீ தென்றார்’ என்பது
கொண்டு முடியும். உன் சொல் குன்றா அமைச்சன் என்பதற்கு உனது புகழ்
குன்றாமைக்குக் காரணமாகிய அமைச்சன் என்றும் பொருள் கொள்க.
குதிரை வீரர்க்கும் அடியார்க்கும் பொருந்துமாறு ‘நம் சூழல் நீங்கா நமர்’
என்றார். (81)