துடுவைவான் முறங்கா றள்ளுந் துணைச்செவி யரிசி கோட்டின்
உடுவைநேர் மணியின் குப்பை யுரலடி யுலக்கை திண்கோ
டடுகலங் கடந்தீச் சோரி மத்தக மடுப்பென் றியானைப்
படுகளம் விசயச் செல்வி யடுமடைப் பள்ளி மானும். |
(இ
- ள்.) வால் துடுவை - வாலைத் துடுப்பாகவும், கால் தள்ளும்
துணைச் செவி - காற்றைத் திரட்டும் இரண்டு செவிகளையும், முறம் -
முறமாகவும், கோட்டின் உடுவை நேர் மணியின் குப்பை அரிசி -
தந்தங்களிலுள்ள நாண் மீனை ஒத்த முத்துக் குவியலை அரிசியாகவும்,
அடி உரல் - அடியை உரலாகவும், திண்கோடு உலக்கை - திண்ணிய
கொம்பை உலக்கையாகவும், கடம் அடுகலம் - கதுப்பைச் சமைக்கும்
கலமாகவும், சோரிதீ - குருதியை நெருப்பாகவும், மத்தகம் அடுப்பு என்று -
மத்தகத்தை அடுப்பாகவும் (கொண்டு), யானைப் படுகளம் - யானைகள்
மடிந்த போர்க்களம், விசயச் செல்வி அடும் மடைப்பள்ளி மானும் - வீரத்
திருமகள் சமைக்கும் மடைப்பள்ளியை ஒக்கும். (37)
பிணத்தினைக்
கோலிப் புண்ணீ ராற்றினைப் பெருக்கி
யுண்பேய்க்
கணத்தினை யுதைத்து நூக்கிக் கரையுடைத் தொருவன் பூதம்
நிணத்தொடும் வருமந் நீத்த நேர்பட விருந்து கையால்
அணைத்துவாய் மடுக்கும் வையை யருந்திய பூத மென்ன. |
(இ
- ள்.) ஒரு வன் பூதம் - ஒரு வலிய பூதமானது, வையை
அருந்திய பூதம் என்ன - வையை நீர்ப் பெருக்கை (இரண்டு கரங்களாலுந்
தடுத்துக்) குடித்த குண்டோதரனென்னும் பூதம்போல, பிணத்தினைக் கோலி
- பிணங்களை அணையாகக் கோலி, புண்ணீர் ஆற்றினைப் பெருக்கி -
சோரி யாற்றினைப் பெருக்கி, உண்பேய்க் கணத்தினை உதைத்து நூக்கி -
உண்ணுகின்ற பேய்க்கூட்டத்தை உதைத்துத்தள்ளி, கரை உடைத்து -
அவ்வணையை உடைத்து, நிணத்தொடும் வரும் அந்நீத்தம் -
நிணங்களோடும் வாராநின்ற அச்சோரிப் பெருக்கினை, நேர்பட இருந்து -
நேர்முகமாக இருந்து, கையால் அணைத்து வாய் மடுக்கும் - இரண்டு
கைகளாலும் தடுத்துப் பருகும். (38)
புரத்தினு ளுயர்ந்த கூடற் புண்ணிய னெழுதி யெய்த
சரத்தினி லவிந்தார் சென்னிக் குற்றுழிச் சார்வாய் வந்த
அரத்தினை யறுக்கும் வைவே லயற்புல வேந்தர் நச்சு
மரத்தினை யடுத்த சந்துங் கதழெரி மடுத்த தென்ன.
|
(இ
- ள்.) புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் - முத்தி
நகரங்களுள் உயர்ந்த கூடலில் வீற்றிருக்கும் அறவடிவினனாகிய
சோமசுந்தரக் கடவுள், எழுதி எய்த சரத்தினில் - தன் பெயர் எழுதி
விடுத்த வாளிகளால், சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த - சோழனுக்கு
இடையூறு நேர்ந்துழி உதவியாகிக் காக்கவந்த, அரத்தினை அறுக்கும்
வைவேல் அயல்புல வேந்தர் - அரத்தை அறுக்கும் கூரிய வேற்படையை
யுடைய
|