நரி பரியாக்கிய படலம்281



அப்பொழு தரசன் றானு மகமகிழ்ந் ததற்கு நேர்ந்தெம்
மெய்ப்புக ழமைச்சர் தம்மின் மேம்படு வாதவூரர்
ஒப்பருந் திற்த்த ராகி யும்மிடை நட்பான் மிக்க
துப்புர வுடைய ரானா ரெனநனி சொல்லி னானே.

     (இ - ள்.) அப்பொழுது அரசன் தானும் அகமகிழ்ந்து - அது போது
மன்னனும் மனமகிழ்ந்து, அதற்கு நேர்ந்து - அதற்கு உடன் பட்டு,
எம்மெய்ப்புகழ் அமைச்சர் தம்மில் - எமது உண்மைப்புகழினையுடைய
அமைச்சருள், மேம்படு வாதவூரர் - சிறப்பெய்திய திருவாதவூரர், ஒப்பு
அருந்திறத்தராகி - ஒப்பற்ற திறமுடையராய், உம்மிடை நட்பால் -
உம்மிடத்துப்பூண்ட நட்பினால், மிக்க துப்புரவு உடையரானார் என - மிக்க
தூய்மை யுடையவரானாரென்று, நனி சொல்லினான் - மிகப் பாராட்டிக்
கூறினான்.

     துப்புரவு - தூய்மை, ஒழுங்கு. நனிசொல்லினான் - மிகப்பாராட்டினான்.
(84)

உரகத வாரந் தோற்றா துயர்மறைப் பரிமேல் வந்தார்
மரகத நிறத்து நிம்ப மாலைதாழ் மார்பி னாற்குக்
குரகதங் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை யாய*
துரகத விலக்க ணங்கள் சொல்லுவான் றொடங்கி னாரே.

     (இ - ள்.) உரகத ஆரம் தோற்றாது - பாம்பணியைக் காட்டாமல்
மறைத்து, உயர் மறைப் பரிமேல் வந்தார் - உயர்ந்த வேதக்குதிரைமேல்
வந்த இறைவர், மரகத நிறத்து நிம்பமாலை தாழ் மார்பினாற்கு - மரகதம்
போன்ற நிறத்தினையுடைய வேப்ப மலர்மாலை தொங்கும் மார்பினையுடைய
பாண்டியனுக்கு குரகதம் கயிறுமாறிக் கொடுப்பவர் - குதிரைகளைக்
கயிறுமாறிக் கொடுக்கலுறுவார், பொதுமையாய துரகத இலக்கணங்கள் -
பொதுவாகிய குதிரை இலக்கணங்களை, சொல்லுவான் தொடங்கினார் -
சொல்லத் தொடங்கினார்.

     உரகதம் - பாம்பு; மார்பால் ஊர்வது என்னும் பொருட்டு, வந்தார்,
பெயர். கொடுப்பவர் - கொடாநின்றவர். (85)

காயும்வேன் மன்ன வோரிக் கடும்பரி யமையம் வந்தான்
ஞாயிலுந் தாண்டிச் செல்லு நாட்டமு நுழையாச் சால
வாயிலு நுழையுங் கண்ட வெளியெலாம் வழியாச் செல்லுந்
தீயவெம் பசிவந் துற்றாற் றின்னாத வெனினுந் தின்னும்.

     (இ - ள்.) காயும்வேல் மன்ன - பகைவரைச் சினக்கும் வேற்படையை
யுடைய வேந்தனே, ஓர் இக்கடும்பரி - ஒப்பற்ற இந்த வேகமுடைய
குதிரைகள், அமையம் வந்தால் - போர் புரிதற்குரிய சமையம் நேரின்,
ஞாயிலும் தாண்டிச் செல்லும் - மதிலுறுப்பையும் தாவிச்செல்லும்; நாட்டமும்


     (பா - ம்.) * பொதுமைத்தாய.