282திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



நுழையாச் சாலவாயிலும் நுழையும் - பார்வையும் நுழையாத பல
கணிவாயிலிலும் நுழைந்து செல்லும்; கண்ட வெளி எலாம் வழியாச் செல்லும்
- பார்த்த வெளிகளனைத்தையும் வழியாகக் கொண்டு செல்லும்; தீயவெம்பசி
வந்துற்றால் - மிகக் கொடியபசி வந்துற்றால், தின்னாத எனினும் தின்னும் -
தின்னப்படாத வைக்கோல் முதலிய வற்றையுந் தின்னும்.

     ஓர் - அறிவாயாக என்றுமாம். ஓரியாகிய பரி என உண்மை புலப்படுத்
துரைக்கும் நயம் பாராட்டற்பாலது; ஓரி - நரி. ஞாயில் - சூட்டு என்னும்
மதிலுறுப்பு. நரியாதற்கேற்ப, ஞாயிலும் என்பதற்கு நாயைக் காட்டிலும்
என்னும் பொருளும், சாலவாயில் என்பதற்கு வலையின் துவாரம், மனையின்
நீர் கழிவாயில் என்னும் பொருள்களும் கொள்ளுதலும் பொருந்தும். காடு
கரை முதலிய வெல்லாம் வழியாகச் செல்லும் என்றும், பிணம் முதலியனவும்
தின்னும் என்றும் நரிக் கேற்கப்பொருள் கொள்க. தின்னாத -
தின்னப்படாதன; வினையாலணையும் பெயர். பொதுவான
குதிரையிலக்கணங்கள் சொல்லத் தொடங்கினவர் இடையே தாம் கொணர்ந்த
குதிரைகளின் தொழிற் பண்புகள் சில கூறினார். (86)

           [கலிவிருத்தம்]
பொருவில்சீ ரிலக்கணப் புரவி யொன்றுதான்
ஒருவன திடைவதிந் துறையி னொல்லென
மருவுறுந் திருமகண் மல்லற் செல்வமும்
பெருகுறுங் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.

     (இ - ள்.) பொருவு இல்சீர் இலக்கணப்புரவி ஒன்று தான் -
ஒப்பில்லாத சிறந்த இலக்கணம் நிறைந்த ஒரு குதிரை, ஒருவனது
இடைவதிந்து உறையின் - ஒருவனிடத்துத்தங்கி உறையுமாயின், ஒல்லெனத்
திருமகள் மருவுறும் - விரைந்து திருமகள் வந்து அவனைப் பொருந்துவான்;
மல்லல் செல்வமும் பெருகுறும் - வளப்பமிக்க செல்வமும் பெருகும்;
கீர்த்திகள் பெற்றியால் பல்கும் - புகழ்களும் பல திறத்தால் மிகா நிற்கும்.

     ஒல்லலன, விரைவுக் குறிப்பு. (87)

நெய்த்திடு மாந்தளிர் நிறத்த நாவின
வைத்திடு குளம்புக ளுயர்ந்த வார்ந்துநேர்
ஒத்திடு மெயிற்றின வுரமுங் கண்டமும்
பைத்திடு மராப்படம் போன்ற பாடலம்.

     (இ - ள்.) நெய்த்திடும் மாந்தளிர் நிறத்தநாவின - பசையினையுடைய
மாந்தளிர் போன்ற நிறத்தினையுடைய நாவினையுடையனவாய், வைத்திடு
குளம்புகள் உயர்ந்த - நிலத்தில் வைக்குங் குளம்புகள் உயர்ந்தனவாய்,
வார்ந்து நேர் ஒத்திடும் எயிற்றின - நீண்டு தம்முளொத்த பற்களை