உன்னம நீளமுண் டாகிச் சங்குவெண்
கன்னலின் வாலிய விலாழி காலவதாய்ப்
பின்னமா கியதனி வன்னம் பெற்றுமை
வன்னமு முடையது வன்னி யாவதே. |
(இ
- ள்.) உன்னதம் நீளம் உண்டாகி - உயரமும் நீளமுமுடையதாய்,
சங்கு வெண் கன்னலின் - சங்கும் வெள்ளைச்சருக்கரையும் போல, வாலிய
விலாழி கால்வதாய் - வெண்மையாகிய வாய் நுரையைக் கக்குவதாய்,
தனிபின்னமாகிய வன்னம் பெற்று - ஒப்பற்ற பிங்கல நிறம் பெற்று,
மைவன்னமும் உடையது - அதனோடு கருநிறமு முடைய குதிரை,
வன்னியாவது - வன்னி என்று சொல்லப்படுவதாகும்.
பொருந்திய
உயரமும் நீளமும் உடையதாகி என்க. இது வன்னி
என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (91)
திணிதரு கழுத்தினிற் சிறந்த தெய்வத
மணியுள தாகியெண் மங்க லத்ததாய்
அணிதரு பஞ்சகல் யாண முள்ளதாய்க்
குணிதரு நீரது குதிரை யாவதே. |
(இ
- ள்.) திணிதரு கழுத்தினில் - திண்ணிய கழுத்தில், சிறந்த
தெய்வத மணி உளதாகி - சிறந்த தெய்வமணியுள்ளதாய், எண்மங்கலத்தாய் -
அட்டமங்கல முடையதாய், அணிதரு பஞ்சகல்யாணம் உள்ளதாய் - அழகிய
பஞ்சகல்யாண முள்ளதாய், குணிதரு நீரது - இங்ஙனம் வரையறுக்கப்பட்ட
பெற்றியையுடைய பரி, குதிரை ஆவது - குதிரை என்னும் பெயருடையதாகும்.
தெய்வமணி
- கழுத்தில் வலமாகச் சுழித்திருக்கும் சுழி; இதனை
இப்படலத்து 111-ம் செய்யுளிலும், எண்மங்கலம், பஞ்சகல்யாணம் என்பவற்றின்
இலக்கணங்களை 10-ம் செய்யுளிலும் காண்க. குதிரை யென்பது ஓர்
வகைக்குச் சிறப்புப் பெயருமாயிற்று. இது குதிரை என்னும் குதிரையின்
இலக்கணம் கூறிற்று. (92)
குங்குமங் கருப்புரங் கொழுந்திண் காரகிற்
பங்கமான் மதமெனக் கமழும் பாலதாய்ச்
சங்கமு மேகமுஞ் சரப முங்கொடுஞ்
சிங்கமும் போலொலி செய்வ தாம்பரி. |
(இ
- ள்.) குங்குமம் கருப்புரம் கொழுந்திண்கார் அகிற்பங்கம்
மான்மதம் என - குங்குமமும் கருப்பூரமும் கொழுவிய திண்ணிய கரிய
அகிற்குழம்பும் மான் மதமுமாகிய இவற்றின் மணமென, கமழும் பாலதாய் -
நறுமணங்கமழும் பான்மையை யுடையதாய், சங்கமும் மேகமும் சரபமும் -
சங்கும் முகிலும் சிம்பும் பள்ளும. கொடுஞ் சிங்கமும்போல் ஒலிசெய்வது -
|