286திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) பகைத்திறம் முருக்கும் இப்பரிகள் - வலிமிக்க
பகைவர்களைக் கொல்லும் இக்குதிரைகள், மன்ன - வேந்தனே, நீ
உகைத்திடத் தக்கவென்று ஓதி - நீ செலுத்தத் தக்கவை என்று சொல்லி,
வேதநூல் சிகைத்தனிச் சேவகர் - மறைநூலின் முடிவாகிய உபநிடதத்தின்
உட்பொருளாகிய இறைவர், தம்மனோர் முகத்தினைத் திருப்பி நோக்கினார்
- தமது கணங்களின் முகத்தைத் திருப்பிப் பார்த்தனர் : மொய்த்த வீரரும்
- சூழ்ந்துள்ள குதிரை வீரரும்.

     வேதப் புரவியின்மீது வந்தமையுந் தோன்ற ‘வேதநூற் சிகைத்தனிச்
சேவகர்’ என்றார். தம்மனோர் - தமர்; கணங்கள். (96)

வாம்பரி மறைக்கெலாம் வரம்பு காட்டுவ
தாம்படி கண்டவ ரறிவும் பிற்படப்
போம்படி முடுக்கினார் புரவி யாவையும்
வேம்பணி தோளினான் வியப்பு மெய்தியே.*

     (இ - ள்.) வாம்பரி மறைக்கு எலாம் வரம்பு காட்டுவதாம்படி -
தாவுகின்ற குதிரைகளின் இலக்கணங்களைக் கூறும் பரிநூலனைத்திற்கும்
எல்லை காட்டுவதாம் படி, கண்டவர் அறிவும் பிற்படப் போம்படி -
கண்டவர்கள் மனமும் பின்னிடப் போமாறு, புரவியாவையும் முடுக்கினார் -
குதிரைகளனைத்தையும் விரையச் செலுத்தினார்கள்; வேம்பு அணிதோளினான்
- வேப்பமலர் மாலையையணிந்த தோளையடைய பாண்டியன், வியப்பும்
எய்தியே - மகிழ்வேயன்றி வியப்பு மெய்தி

.      பரிமறை - புரவிநூல். அறிவு - ஈண்டு மனம். (97)

ஆத்தராய் மருங்குறை யமைச்சர் யாரையும்
பார்த்தசை யாமுடி யசைத்துப் பைப்பையப்
பூத்தவா ணகையொடு மகிழ்ச்சி பொங்கினான்
தீர்த்தனு நடத்தினான் றெய்வ மாவினை.

     (இ - ள்.) ஆத்தராய் மருங்கு உறை அமைச்சர் யாரையும்பார்த்து -
தனக்கு உறுதி சூழ்பவராய் அருகு - சூழ்ந்த மந்திரிகளனைவரயும் நோக்கி,
அசையாமுடி அசைத்து - துளங்காத முடியினைத் துளக்கி, பைப்பைய
பூத்தவாள் நகையொடு மகிழ்ச்சி பொங்கினன் - மெல்ல அரும்பிய ஒள்ளிய
புன்னகையுடன் மகிழ்ச்சி கூர்ந்தனள்; தெய்வமாவினை தீர்த்தனும்
நடத்தினான் - தெய்வத்தன்மையை யுடைய குதிரையை இறைவனும்
நடத்தியருளினான்.

     ஆத்தர் - ஆப்தர்; உறுதிநாடுவோர், பைப்பைய, விகாரம். தீர்த்தன் -
தூயன். (98)


     (பா - ம்.) * வியப்ப மெய்தியே. வியப்ப மெய்தினான்.