குதிரைகள் வான்மீக
நாட்டிலுள்ளவை; இக் கந்துகம் சிந்து - இக்குதிரைகள்
சிந்து நாட்டிலுள்ளவை; இக்கனவட்டம் துளங்கு இல்பாஞ்சாலம் -
இக்குதிரைகள் (பகைவரால்) கலங்குதலில்லாத பாஞ்சால நாட்டிலுள்ளவை;
இக்குதிரை துளுவம் - இக்குதிரைகள் துளுவ நாட்டிலுள்ளவை; இத்துரகம்
களங்கம் இல் இமயம் - இக்குதிரைகள் குற்றமில்லாத பனிமலையி
லுள்ளவை; இக்கற்கி பருப்பதம் - இக்குதிரைகள் திருப்பருப்பதத்திலுள்ளவை;
இம்மண்டிலம் கலிங்கம் - இக்குதிரைகள் கலிங்க நாட்டிலுள்ளவை.
குரங்கல்
- வளைதல். குரங்குளை, ஆகுபெயர். இப்பரி காம்போசம்
என்றாற் போல் வருவனவெல்லாம் பிறந்த வழிக்கூறல் என்னும்
ஆகுபெயராகும். இது முதல் நான்கு செய்யுட்களில் குதிரையின் பரியாயப்
பெயர்கள் பலவற்றையும் ஆசிரியர் எடுத்தமைத்திருக்கும் திறன்
பாராட்டற்குரியது. (104)
ஆரிய மிந்தப் பாடல மிந்த வச்சுவங் *கூர்ச்சர மிந்தச்
சீரிய துரங்கங் கேகய மிந்தத் திறலுறு கொய்யுளை யவனம்
வேரியம் பணைசூழ் மக்கமிக் கொக்கு விரிபொழில் வனாயுச மிந்தப்
போரிய லிவுளி பல்லவ மிந்தப் பொலம்புனை தார்நெடும் பாய்மா.
|
(இ
- ள்.) இந்தப் பாடலம் ஆரியம் - இக்குதிரைகள் ஆரிய
நாட்டிலுள்ளவை; இந்த அச்சுவம் கூர்ச்சரம் - இக்குதிரைகள் கூர்ச்சர
நாட்டிலுள்ளவை; இந்தச் சீரிய துரங்கம் கேகயம் - இந்தச் சிறந்த குதிரைகள்
கேகய நாட்டிலுள்ளவை; இந்தத்திறல் உறு கொய்யுளை யவனம் - இந்த
வலிமிக்க பிடர்மயிரை யுடைய குதிரைகள் யவனநாட்டிலுள்ளவை;
இக்கொக்கு வேரி அம்பணை சூழ் மக்கம் - இக்குதிரைகள் மணம் நிறைந்த
அழகிய வயல்கள் சூழ்ந்த மக்க நாட்டி லுள்ளவை; இந்தப்போர் இயல்
இவுளி விரிபொழில் வனாயுசம் - போர்புரியும் வன்மை அமைந்த
இக்குதிரைகள் விரிந்த பொழில் சூழ்ந்த வனாயுச நாட்டிலுள்ளவை; இந்தப்
பொலம்புனைதார் நெடும் பாய்மா பல்லவம் - இந்தப் பொன்னாலாகிய
அழகிய கிண்கிணிமாலை யணிந்த நீண்டபாய்கின்ற குதிரைகள் பல்லவ
நாட்டிலுள்ளவை. (105)
கற்றவர் புகழ்சவ் வீரமிக் கோரங் கன்னிமா ராட்டமிவ் வன்னி
கொற்றவர் பயில்வா சந்திக மிந்தக் கோடகங் காடகங் கன்னல்
உற்றகான் மீர மிவ்வய மிந்த வுத்தம கோணமா ளவமிவ்
வெற்றிசேர் குந்தங் கந்தர மிந்த விறல்புனை யரிசவு ராட்டம்.
|
(இ
- ள்.) இக்கோரம் கற்றவர் புகழ் சவ்வீரம் - இக்குதிரைகள்
புலவர் புகழுஞ் சவ்வீர நாட்டிலுள்ளவை; இவ்வன்னி கன்னிமாராட்டம் -
இக்குதிரைகள் அழியாத மாராட்ட நாட்டிலுள்ளவை; இந்தக் கோடகம்
கொற்றவர் பயில் வாசந்தி கம் - இக்குதிரைகள் மன்னர்கள்வதியும் வாசந்திக
நாட்டிலுள்ளவை; இவ்வயம் காடு அகம் கன்னல் உற்ற கான்மீரம் -
(பா
- ம்.) * குர்ச்சரம்
|