290திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இக்குதிரைகள் காட்டிட மெல்லாம் கரும்புகள் நிறைந்த கான்மீர
நாட்டிலுள்ளவை; இந்த உத்தமகோணம் மாளவம் - இந்த மேலான
குதிரைகள் மாளவநாட்டிலுள்ளவை; இவ் வெற்றிசேர் குந்தம் கந்தரம்
-இவ்வெற்றி பொருந்திய குதிரைகள் கந்தரநாட்டிலுள்ளவை; இந்த
விறல்புனை அரி சவுராட்டம் - இந்த வெற்றியும் அழகுமுள்ள குதிரைகள்
சவுராட்ட நாட்டிலுள்ளவை.

     மாராட்டம் - மகாராஷ்டிரம். கான்மீரம் - காஸ்மீரம். இவ்வயம் -
இந்த அயம். சவுராட்டம் - சௌராஷ்டிரம். (106)

விரிபொழிற் சாலி வேய்மிகு கிள்ளை வேறுதீ வாந்தர மிந்தத்
துரகத மிந்தக் குரகதங் கொண்டல் சூழ்குருக் கேத்திர மின்ன
பரவுபல் வேறு தேயமு முள்ள பரியெலா மிவன்றரு பொருளின்
விரவிய நசையாற் கொணந்திவர் வந்தார் வேந்தகே ளிந்தவாம்
                                              பரியுள்.

     (இ - ள்.) வேய்மிகுகிள்ளை - ஒப்பனைமிக்க இக்குதிரைகள், விரிபொழில் சாலி - விரிந்த சோலைசூழ்ந்த சாலிநாட்டிலுள்ளவைகள்; இந்தத்துரகதம் வேறு தீவாந்தரம் - இந்தக்குதிரைகள் வேறு தீவாந்தரங்களிலுள்ளவை; இந்தக்குரகதம் கொண்டல் சூழ் குருக்கேத்திரம் - இக்குதிரைகள் முகில்சூழ்ந்த குருக்கேத்திரத்திலுள்ளவை; இன்னபரவு பல்வேறு தேயமும் உள்ள பரி எலாம் - ‘இந்தப்பரந்த பல்வேறு வகைப்பட்ட தேயங்களிலுமுள்ள குதிரைகளையெல்லாம், இவன் தருபொருளின் விரவிய நசையால் - இவ்வாதவூரன் கொடுத்த பொருளினாற் போந்த விருப்பத்தால், இவர் கொணர்ந்து வந்தார் - இவர்கள் கொண்டு வந்தனர்; வேந்தகேள் - மன்னனே கேட்பாயாக; இந்த வாம்பரியுள் - இந்தத்தாவுங் குதிரைகளுள்.

     வேய் - ஒப்பனை. குருக்கேத்திரம் - குருக்ஷேத்திரம்.

"தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசால்
மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த
பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்
குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய"

"பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த
வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த
பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச்
சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்"

"பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய
மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே
போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த
கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை"

என்னும் சிந்தாமணிச் செய்யுட்கள் இங்கே நோக்கற்பாலன. (107)