நரி பரியாக்கிய படலம்291



வெண்ணிறஞ் சிவப்புப் பொன்னிறங் கறுப்பு வேறற விரவிய நான்கு
வண்ணமுள் ளனவும் வேறுவே றாய மரபுமை வண்ணமும் வந்த
எண்ணிய விவற்றின் சிறப்பிலக் கணத்தை
                        யியம்புதுங்கேளெனவிகல்காய்
அண்ணலங் களிற்றாற் கருமறைப் பரிமே லழகியா ரரடைவுடன்
                                           விரிப்பார்.

     (இ - ள்.) வெண்ணிறம் சிவப்பு பொன்னிறம் கறுப்பு நான்கு -
வெள்ளை நிறமும் சிவப்பு நிறமும் பொன்னிறமும் கருப்புநிறமுமாகிய
இந்நான்கும், வேறு அற விரவிய வண்ணம் உள்ளனவும் - வேறுபாடு
இன்றிக் கலந்த நிறத்தையுடைய குதிரைகளும், வேறு வேறு ஆய மரபும் -
அந்நிறங்களைத் தனித்தனியுடைய குதிரைகளும், ஐவண்ணமும் வந்த -
ஐந்து நிங்களையுடைய குதிரைகளும் வந்தன. எண்ணிய இவற்றின் -
மதிக்கத்தக்க இக்குதிரைகளின், சிறப்பு இலக்கணத்தை இயம்புதும் கேள்
என - சிறப்பிலக்கணங்களைக் கூறுவோம் கேட்பாயாக என்று, இகல்காய்
அண்ணல் அம் களிற்றாற்கு - பகைவரைச் சினக்கும் பெருமையும்
அழகுமுடைய யானையினையுடைய பாண்டியனுக்கு, அருமறைப் பரிமேல்
அழகியார் - அரிய வேதப்பரிமேல் வந்தருளிய விடங்கர், அடைவுற
விரிப்பார் - முறைப்பட விரித்துக் கூறுவார்.

     ஐவண்ணம், ஆகுபெயர். (108)

வெள்ளிநித் திலம்பால் சந்திரன் சங்கு வெண்பனி போல்வது
                                         வெள்ளைத்
துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்தசெம் பஞ்சியின் குழம்பிற்
றெள்ளிய நிறத்த செம்பரி மாமை சிறைக்குயில் வண்டுகார்
                                         முகில்போல்
ஒள்ளிய கரிய பரியெரி யழலா னுரோசனை நிறத்தபொற் பரியே.

     (இ - ள்.) வெளி நித்திலம் பால் சந்திரன் - வெள்ளியும் முத்தும்
பாலும் மதியும், சங்கு வெண்பனி போல்வது - சங்கும் வெள்ளிய பனியும்
போன்றது, துள்ளிய வெள்ளைப் புரவி - தாவுகின்ற வெள்ளைக்குதிரையாகும்;
மாதுளம் போது சுகிர்ந்த செம்பஞ்சியின் குழம்பின் - மாதுளம் பூவும் சீவிய
செம்பஞ்சியின் குழம்பும் போல, தெள்ளிய நிறத்த செம்பரி - தெளிந்த
நிறத்தினையுடையவை சிவப்புக் குதிரைகளாகும். மாமை சிறைக்குயில் வண்டு
கார் முகில்போல் ஒள்ளிய கரிய பரி - கரிய மையும் சிறையையுடைய
குயிலும் வண்டும் கரிய முகிலும்போல ஒளியையுடையன
கருங்குதிரைகளாகும்; எரி அழல் ஆன்உரோசனை நிறத்தபொன் பரி -
எரிகிற் அனலும் கோரோசனையும் போன்ற நிறமுடையன பொன்மைக்
குதிரைகளாகும்.

     எண்ணும்மைகள் தொக்கன. நிறத்த, ஒள்ளிய என்பன குறிப்புவினைப்
பெயர்கள். மா - கருமை. ஆன்உரோசனை - கோரோசனை. (109)