தெரிதர வகுத்த
விந்நிற நான்குஞ் செறிந்தது *மிச்சிரு மெனப்பேர்
உரைசெய்வர் முகமார் புச்சிவால் காலென் றுரைத்தவெட் டுறுப்பினும்
வெண்மை
விரவிய தட்ட மங்கலந் தலைவால் வியனுர மென்றவிம் மூன்றும்
ஒருவிய வுறுப்போ ரைந்திலும் வெள்ளை யுள்ளது பஞ்சகல் யாணி. |
(இ
- ள்.) தெரிதர வகுத்த இந்நிறம் நான்கும் செறிந்தது - தெரியுமாறு
வகுக்கப்பட்ட இந்நான்கு நிறங்களுங் கலந்து செறிந்த குதிரைக்கு, மிச்சிரம்
எனப் பேர் உரை செய்வர் - மிச்சிரமென்று பெயர் கூறுவர்; முகம் மார்பு
உச்சி வால் கால் என்று உரைத்த - முகமும் மார்பும் உச்சியும் வாலும்
நான்கு கால்களும் என்று உரைக்கப்பட்ட, எட்டு உறுப்பினும் வெண்மை
விரவியது அட்டமங்கலம் - இவ்வொட்டு உறுப்புக்களினும் வெண்மை
கலந்தது அட்டமங்கலமாகும்; தலை வால் வியன் உரம் என்ற இம்மூன்றும்
ஒருவிய - தலையும் வாலும் சிறந்த மார்புமாகிய இம்மூன்றும் நீங்கப்பெற்ற,
உறுப்பு ஓரைந்திலும் வெள்ளை உள்ளது பஞ்சகல்யாணி - ஓரைந்து
உறுப்புக்களிலும் வெண்மையுள்ளது பஞ்சகல்யாணியாகும்.
மிச்சிரம்
- கலவை. உறுப்பு ஐந்து - முகமும் நான்கு கால்களும். (110)
அணிகிளர் கழுத்தில் வலஞ்சுழி திருந்தா லறிந்தவ ரதனையே தெய்வ
மணியென விசைப்பர் முகந்தலை நாசி மார்பமிந் நான்குமிவ் விரண்டு
பணிதரு சுழியு நுதனடுப் ?பின்னைப் பக்கமு மொவ்வொரு சுழியுந்
துணிதர விருப்ப திலக்கண முளதிச் சுழியில திலக்கண வழுவே. |
(இ
- ள்.) அணிகிளர் கழுத்தில் வலம் சுழித்து இருந்தால் - அழகு
விளங்குங் கழுத்தின்கண் வலமாகச் சுழித்திருப்பின், அறிந்தவர் -
பரிநூலினைக் கற்றுணர்ந்தவர், அதனையே தெய்வமணி என இசைப்பர் -
அச்சுழியினையே தேவமணி என்று கூறுவர்; முகம் தலைநாசிமார்பம்
இந்நான்கும் - முகமும் தலையும் மூக்கும் மார்புமாகிய இந்நான்கு
உறுப்புக்களிலும், பணிதரு இவ்விரண்டு சுழியும் - நல மென்று கூறப்படும்
இரண்டிரண்டு சுழிகளும், நுதல் நடு பின்னைப் பக்கமும் - நெற்றி நடுவிலும்
பின் பக்கத்திலும், ஒவ்வொரு சுழியும் துணிதர இருப்பது - ஒவ்வொரு
சுழியும் ஐயமற விருப்பது, இலக்கணம் உளது - இலக்கணமுடைய
குதிரையாகும்; இச்சுழி இலது இலக்கணவழு - இச்சுழிகளில்லாதது
இலக்கணக்குற்ற முடையதாகும்.
பணிதரு
- அடங்கித் தோன்றும் என்றுமாம். துணிதர - தெளிய. வழு
- வழுவுள்ளது. (111)
பிரிவுற
வுரத்தி லைஞ்சுழி யுளது பேர்சிரீ வற்சமா நுதலில்
இருசுழி யாதன் முச்சுழி யாத லிருக்கினு நன்றது வன்றேல்
ஒருவற நான்கு சுழிவலம் புரியா வுள்ளது நல்லது வன்றி
இருசுழி முன்னங் கால்களின் மூலத் திருக்கினு நல்லதென்
றிசைப்பார். |
(பா
- ம்.) * மிச்சிர மிதன்பேர். +பின்பு பக்கமும்.
|