நரி பரியாக்கிய படலம்293



     (இ - ள்.) பிரிவு உற உரத்தில் ஐஞ்சுழி உளது - (ஒன்றோ டொன்று
நெருங்காமல்) பிரிவினைப் பொருந்த மார்பின்கண் ஐந்து சுழியுள்ள குதிரை,
பேர் சிழீவற்சமாம் - சிரீவற்சம் என்னும் பெயருடையதாகும்; நுதலில் இருசுழி
ஆதல் முச்சுழி ஆதல் இருக்கினும் நன்று - நெற்றியின் கண் இரண்டு
சுழியாவது மூன்று சுழியாவது இருந்தாலும் நலமாகும்; அது அன்றேல் -
அங்ஙனமில்லையானால், ஒருவு அற நான்கு சுழிவலம்புரியா உள்ளது நல்லது
- நீங்குதலின்றி (ஒன்றோடொன்று தொடர்ந்து) நான்கு சுழி வலம்புரியாக
இருப்பது நன்மையாம்; அன்றி - அல்லாமல், முன்னம் கால்களின் மூலத்து -
முன் கால்களின் அடியில், இருசுழி இருப்பினும் நல்லது என்று இசைப்பார் -
இரண்டு சுழி இருந்தாலும் நலமென்று கூறுவர்.

     ஆதல் - ஆவது; இடைச் சொல். (112)

களநடு விரட்டைச் சுழியுடைப் பரிதன் கருத்தனுக் கறமிடி காட்டும்
அளவறு துன்ப மரணமுண் டாக்கு மவைகணைக் காலுள வாகில்
உளபயந் துன்ப நிகளபந் தனமே லுதடுமுற் காலடி கபோலம்
வளர்முழந் தாளிந் நான்கினுஞ் சுழிகண் மன்னினுந் தலைவனை                                            வதைக்கும்.

     (இ - ள்.) களம் நடு இரட்டைச் சுழியுடைப் பரி - கழுத்து நடுவில்
இரட்டைச் சுழியினையுடைய குதிரை, தன் கருத்தனுக்கு அறமிடி காட்டும் -
தன்தலைவனுக்கு மிகவும் வறுமையை உண்டாக்கும்; அளவு அறு துன்பம்
மரணம் உண்டாக்கும் - (இன்னும்) அளவிறந்த துன்பத்தினையும்
மரணத்தினையும் உண்டாக்கும்; அவை கணைக் கால் உளவாகில் -
அச்சுழிகள் கணைக்காலிலுள்ளனவாயின், பயம் துன்பம் நிகளபந்தனம் உள
- அச்சமும் துன்பமும் விலங்கு பூணுதலும் உளவாகும்; மேல் உதடு முன்கால்
அடி கபோலம் வளர் முழந்தாள் - மேலுதடும் முன்காலின் அடியும்
கபோலமும் வளர்ந்த முழந்தாளுமாகிய, இந்நான்கினும் சுழிகள் மன்னினும்
தலைவனை வதைக்கும் - இந்நான்குறுப்பினும் சுழிகள் இருந்தாலும்
தலைவனைக் கொல்லும்.

     உளபயம் - மனோபயம் என்றுமாம். (113)

இச்சுழி யுடைய புரவிபந் தியில்யாத் திருக்கினும் பழுதிவை கிடக்க
அச்சமில் பரிக்குப் பிராயநா லெட்டா மவத்தைபத் தாகுமொவ்
                                             வொன்றில்
வைச்சது மூன்று வருடமு மிரண்டு மதியமும் பன்னிரு நாளும்
நிச்சயித் தளந்தா ரின்னமு மொருசார் நிகழ்த்திடு மிலக்கண
                                             மதுகேள்.

     (இ - ள்.) இச்சுழி உடைய புரவி - இந்தக் குற்றமுள்ள
சுழியினையுடைய குதிரைகள், பந்தியில் யாத்து இருக்கினும் - பந்தியில்
கட்டப்பட்டிருப்பினும், பழுது - தீங்குவிளையும்; இவை கிடக்க - இவை
நிற்க; அச்சம் இல்பரிக்குப் பிராயம் நாலெட்டாம் - போரின்கண்
அஞ்சுதலில்லாத குதிரைக்கு வயசு முப்பத்திரண்டாகும்; அவத்தை பத்து
ஆகும் - பருவம் பத்தாகும்; ஒவ்வொன்றில் வைச்சது - ஒவ்வொரு