பருவத்திலும் வைத்த
கால வளவு, மூன்று வருடமும் இரண்டு மதியமும்
பன்னிரு நாளும் நிச்சயித்து அளந்தார் - மூன்றாண்டும் இரண்டு திங்களும்
பன்னிரண்டு நாளுமெனத் துணிந்து வரையறை செய்தனர்; இன்னமும் ஒரு
சார் நிகழ்த்திடும் இலக்கணம் கேள் - இன்னமும் ஒரு வகையாகப் பரிநூலார்
கூறும் இலக்கணத்தைக் கேட்பாயாக.
அச்சமில்
என்றது பரிக்குப் பொதுவான அடை. அவத்தை - பருவம்.
வைச்சது, போலி. பரிநூலோர் நிச்சயித்தளந்தார் என்க. இலக்கணமது, அது
பகுதிப் பொருள் விகுதி. (114)
[அறுசீரடியாசிரிய
விருத்தம்] |
எவ்வண்ண
பேதமிகுந் திருந்தாலும் வெள்ளைகலந் திருந்த தானால்
அவ்வண்ணப் பரிநன்று கரும்புரவிக் கேடேனு மகன்மார் பேனுஞ்
செவ்வண்ண மிருக்கினது சயமுளதப் படிவெண்மை சேர்ந்தா லந்த
மைவண்ணப் பரியின்பேர் வாருணமாஞ் சயங்கொடுக்கு மாற்றார்
போரில்.
|
(இ
- ள்.) எவ்வண்ண பேதம் மிகுந்து இருந்தாலும் - எந்த நிறத்தின்
வகை மிக்கிருந்தாலும், வெள்ளை கலந்து இருந்தது ஆனால் - வெண்ணிறங்
கலந்திருக்குமாயின், அவ்வண்ணப் பரிநன்று - அந்நிறத்தையுடைய குதிரை
நல்லது; கரும புரவிக்கு அகடேனும் அகல் மார்பேனும் - கரிய குதிரைக்கு
வயிற்றிலேனும் அகன்ற மார்பிலேனும், செவ்வண்ணம் இருக்கின் - செந்நிற
மிருக்குமாயின், அது சயம் உளது - அக்குதிரை வெற்றியையுடையது, அப்படி
வெண்மை சேர்ந்தால் - அங்ஙனமே வெண்ணிற மிருப்பின், அந்த மை
வண்ணப் பரியின்பேர் - அந்த மை போலுங் கரிய நிறத்தினையுடைய
குதிரையின் பெயர், வாருணம் ஆம் - வாருண மென்பதாகும்; மாற்றார்
போரில் சயம் கொடுக்கும் - அது பகைவருடன் புரியும் போரின்கண் தன்
தலைவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
அகடு,
மார்பு என்பவற்றில் ஏழனுருபு விரிக்க. அது சயங் கொடுக்கும்
எனச் சுட்டு வருவிக்க. சயம். வடமொழித்தற்பவம். (115)
மகவளிக்கும் பிடர்வெளுப்பு மகிழ்வளிக்கு
முரவெளுப்பு மணித்தார்க் கண்டத்
தகவௌப்புப் பொருள்கொடுக்கு முகவெளுப்புச்
சயங்கொடுக்கு மதன்பின் பக்கத்
தகவெளுப்புச் சுகம்பயக்கு மிடவெளுப்புச்
சந்தானந் தழைக்குஞ் செல்வம்
மிகவளர்க்குந் தனம்பலதா னியநல்கும்
வலப்புறத்து வெள்ளை மாதோ. |
|