(இ
- ள்.) பிடர்வெளுப்பு மகவு அளிக்கும் - பிடர் வெளுப்புள்ள
குதிரை தன் தலைவனுக்கு மகப் பேற்றினைக் கொடுக்கும்; உரவெளுப்பு
மகிழ்வு அளிக்கும் - மார்பு வெளுப்புள்ள குதிரை மகிழ்ச்சியைக்
கொடுக்கும்; மணித்தார்க் கண்டத்து அகவெளுப்பு - மாணிக்கமாலையை
யணிந்த கழுத்தின்கண் வெண்மையுள்ள குதிரை, பொருள் கொடுக்கும் -
பொருளைக் கொடுக்கும்; முகவெளுப்பு சயம் கொடுக்கும் - முகவெளுப்புள்ள
குதிரை வெற்றியைக் கொடுக்கும்; அதன்பின் பக்கம் தகவெளுப்பு -
அம்முகத்தின் பின்பக்கத்தின் கண் பொருந்த வெளுப்பமைந்த குதிரை, சுகம்
பயக்கும் - இன்பத்தைக் கொடுக்கும்; இடவெளுப்பு சந்தானம் தழைக்கும்
செல்வ மிக வளர்க்கும் - இடது பக்கத்தில் வெண்மையுள்ள குதிரை மகப்
பேறு மிகுதலாகிய செல்வத்தை மிகப் பெருக்கும்;
வலப்புறத்து
வெள்ளை - வலது பக்கத்தின்கண் வெண்மையுள்ள
குதிரை, தனம் பல தானியம் நல்கும் - திரவியத்தையும் பல
விளைபொருளையும் அளிக்கும். வெளுப்பு, வெள்ளை என்பன பரிக்கு
ஆயின. மணித்தார் - கிண்கிணிமாலையுமாம். தழைக்கும் - தழைவிக்கும்
எனப் பிறவினை முற்றுமாம். (116)
நற்புறம்வான்
முகமூன்றும் வெளுத்தபரி வென்றிதரு* நாபி தொட்டு
முற்புறமெ லாம்பரிதி யெனச்சிவந்து மதியெனப்பின் முழுதும்
வெள்கும்
பொற்புடைய வயப்பரிக்குப் பகல்விசய மதியெனமுற் புறம்பு வெள்கிப்
பிற்புறமெல் லாங்கதிர்போற் சிவந்தபரிக் கிராவிசயம் பெருகு? மன்றே. |
(இ
- ள்.) நல்புறம்
வால்முகம் மூன்றும் வெளுத்தபரி வென்றிதரும் -
நல்ல முதுகும் வாலும் முகமுமாகிய இம்மூன்றிலும் வெண்ணிறமுள்ள குதிரை
(தன் தலைவனுக்கு) வெற்றியைத் தரும்; நாபிதொட்டு - உந்தி முதலாக, முன்
புறம் எலாம் பரிதி எனச் சிவந்து - முன் பக்கமனைத்தும் சூரியனைப்போல்
செந்நிறம் பெற்று, பின் முழுதும் மதி என வெள்கும் - பின்புறமனைத்துஞ்
சந்திரனைப் போல வெளுத்திருக்கும், பொற்பு உடைய வாம்பரிக்குப் பகல்
விசயம் - அழகுடைய தாவுங்குதிரைக்குப் பகற்போரில் வெற்றியும், முன்
புறம்பு மதி என வெள்கி - முன்புறமுற்றும் சந்திரனைப்போன்று வெண்ணிறம்
பெற்று, பின்புறம் எல்லாம் கதிர்போல் சிவந்த பரிக்கு - பின்புறமனைத்து
சூரியனைப்போலச் சிவந்த குதிரைக்கு, இராவிசயம் பெருகும் - இராப்போரில்
வெற்றியும் பெருகும்.
வெள்கல்
- வெளுத்தல்; வெண்மையாதல். புறம்பு - புறம். பக்கம். பகல்
விசயமும் இராவிசயமும் பெருகும் என்க. (117)
வந்தனவா
லிவ்விரண்டு வகைப்பரியும் புரவியடி வைத்தா லொத்த
பந்தெனவு நின்றாலோ மலையெனவு மொலித்தாலோ பகடு சீறும்
வெந்தறுக ணரியெனவும் வேகத்தாற் காற்றெனவு மிதிக்குங் கூத்தாற்
சந்தநட மகனெனவு நடக்கிலரி களிறெனவுந் தகைய தாகி. |
(பா - ம்.) * நன்றிதரும்.
+விசயம் பெருக்கும். +தகையவாகி.
|