நரி பரியாக்கிய படலம்297



     (இ - ள்.) உத்தமவாம்பரிக்கு உயர்வு நூறுவிரல் - தாவுகின்ற
உத்தமக் குதிரைக்கு உயரம் நூறுவிரலளவாகும், மத்திமவாம்பரிக்கு நூறு
ஈரெட்டு விரல் நீக்கிக் கூறுவிரல் - தாவுகின்ற மத்திமக்குதிரைக்கு உயரம்
அந்நூறு விரலில் பதினாறு விரல் நீக்கி மீதமாகக் கூறப்படும் எண்பத்து
நான்கு விரலளவாகும், அதமக்குதிரைக்கு அறுபத்தொன்று என்ப -
அதமக்குதிரைக்கு உயரம் அறுபத்தொரு விரலளவாகும் என்று கூறுவர்; ஈறு
இல் புகழாய் - அழிவில்லாத புகழை யுடையோய், பொருநர் - வேந்தர்கள்,
இப்பரியைப் பூசனம் செய்து இறைஞ்சிப் பாசம் மாறுவர் என -
இக்குதிரைகளைப் பூசித்து வணங்கிக் கயிறுமாறுவார் களென்று கூறியருள,
மணித்தார் சதங்கை சிலம்பு அணிவித்து - அழகிய கிண்கிணி மாலையும்
சதங்கை மாலையும் சிலம்பும் அணிவித்து, மதிக்கோமாறன் - சந்திரன்
மரபினனாகிய அரிமருத்தன பாண்டியன்.

     என்ப என்பதனை முன்னும் கூட்டுக. பொருநர் - ஈண்டு வேந்தர்.
பூசனஞ் செய்து - பூசித்து. மாறுவர் - மாறும் வழக்க முடையர். பொருகின்ற
நரிப்பரியை என உண்மை புலப்பட வைக்கும் நயம் பாராட்டற்குரியது. (120)

கொத்தவிழ்தார் நறுஞ்சாந்தங் கொண்டுசெழும் புகைதீபங்
                                      கொடுத்துப் பூசை
பத்திமையாற் செய்திறைஞ்சி யெதிர்நிற்ப வாலவாய்ப் பரனை
                                            நோக்கிக்
கைத்தலந்தன் சிரமுகிழ்த்து வாழியெனப் பரிகொடுத்தான் கயிறு
                                             மாறி
முத்தொழிலின் மூவராய் மூவர்க்குந் தெரியாத முக்கண் மூர்த்தி.

     (இ - ள்.) கொத்து அவிழ்தார் நறுஞ்சாந்தம் கொண்டு - கொத்தொடு
மலர்ந்தமலர்களாற் றொடுத்தமாலையும் நறிய சந்தனமுங் கொண்டு,
செழும்புகை தீபம் கொடுத்து - செழிய தூபமும் தீபமுங் கொடுத்து,
பத்திமையால் பூசை செய்து - அன்புடன் வழிபட்டு, இறைஞ்சி எதிர் நிற்ப -
வணங்கி எதிரே நிற்க, முத்தொழிலின் மூவராய் - மூன்று தொழில்களை
யுடைய மூன்று தேவராகியும், மூவர்க்கும் தெரியாத முக்கண்மூர்த்தி -
அம்மூவருக்கும் தெரியாத மூன்று கண்களையுடைய இறைவன், ஆலவாய்ப்
பரனை நோக்கி - திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளை
நோக்கி, கைத்தலம் தன் சிரம் முகிழ்த்து - கைத்தலங்களைத் தன்
முடியிற்குவித்து, வாழி என கயிறு மாறிப் பரிகொடுத்தான் - மன்னன்
வாழக்கடவன் என்று வேண்டிக் கயிறு மாறிக் குதிரைகளைக் கொடுத்தனன்.

     முத்தொழில் - படைத்தல் காத்தல் அழித்தல். முத்தொழிலின் -
முத்தொழில் புரிதற்பொருட்டு என்றுமாம்.

ழுபடைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினைழு

எனத் திருவெழுகூற்றிருக்கையுள் வருதலுங் காண்க. இறைவன் மூவர்க்கு
முதலான துரிய மூர்த்தி என்பதனை,

ழுதேவர்கோ வறியாத தேவதேவன்
செழும் பொழில்கள் பயந்து காத் தழிக்கு மற்றை
மூவர் கோ னாய்நின்ற முதல்வன்ழு