என்னும் திருவாசகத்தானும்
அறிக. கருணை மாக்கடல் இறைஞ்சிப் பாசம்
மாறுவர் என்று கூற, மாறன் அணிவித்துப் பூசைசெய்து இறைஞ்சி நிற்ப,
மூர்த்தி பரனை நோக்கி முகிழ்த்து மாறிப் பரிகொடுத்தான் என முடிக்க. (121)
-
வேறு |
உவநிடக்
கலணை வாசி யொன்றலா னின்ற மாயக்
கவனவாம் புரவி யெல்லாங் கொடுத்திடக் கவர்ந்து வீறு
தவனனில் விளங்குந் தென்னன் றன்பெருங் கோயி லுய்ப்பப்
பவனமுங் கடலும் போலக் கொண்டுபோய்ப் பந்தி சேர்த்தார். |
(இ
- ள்.) உவநிடக் கலணைவாசி ஒன்று அலால் - மறைமுடியாகிய
கல்லணையையுடைய வேதப் பரி ஒன்றை யல்லாமல், நின்ற கவன மாயவாம்
புரவி எல்லாம் கொடுத்திட - வேறு நின்ற வேகமுடைய வஞ்சகமாகிய
தாவுகின்ற குதிரைகளனைத்தையுங் கொடுத்திட, வீறு தவனனில் விளங்கும்
தென்னன் - ஒப்பற்றெழுந்த சூரியனைப்போல விளங்கும் பாண்டியன்,
கவர்ந்து - வாங்கி, தன் பெருங்போயில் உய்ப்ப - தனது அரமனையிற்
செலுத்துமாறு கட்டளையிட, பவனமும் கடலும் போலக் கொண்டுபோய் -
(ஏவலாளர்) காற்றையும் கடலையும் கொண்டுபோவது போலக்
கொண்டுபோய், பந்தி சேர்த்தார் - மந்துரையிற் சேர்த்தனர்.
உபநிடதம்
எனற்பாலது திரிந்து நின்றது. கவனம் - வேகம். வீறு - பிறி
தொன்றற் கில்லாத சிறப்பு. உய்ப்ப - உய்க்குமாறு கட்டளையிட. வேகத்தாற்
பவனமும், பரப்பாலும் தோற்றத்தாலும் ஒலியாலும் கடலும் போன்ற தென்க.
(122)
வாசிவா
ணிகர்க்குத் தென்னன் வெண்டுகில் வரிசை யாக
வீசினான் பாணற் கேவல் செய்தவர் வெள்கு வாரோ
கூசிலா நேசர்க் காப்பான் குதிரையி னிழிந்தேற் றந்தத்
தூசினை யிரண்டாங் கங்கை யெனமுடி சூடி நின்றார். |
(இ
- ள்.) வாசி வாணிகர்க்குத் தென்னன் வரிசையாக வெண்துகில்
வீசினான் - குதிரை வணிகராகிய இறைவருக்குப் பாண்டியன் வெள்ளிய
ஆடை ஒன்றினைப் பரிசிலாகக் கொடுத்தனன், பாணற்கு ஏவல் செய்தவர்
வெள்குவாரோ - பாணபத்திரனுக்கு அடிமை என்று கூறி அவன் பணியைச்
செய்தவர் (இதனை வாங்குதற்கு) நாணுவாரோ, கூசுஇலா - சிறிதும்
நாணமில்லாமல், நேசர்க் காப்பான் - அன்பராகிய வாதவூரரைக் காத்தற்
பொருட்டு, குதிரையின் இழிந்து அந்தத் துசினை ஏற்று - குதிரையினின்றும்
இறங்கி அந்த ஆடையை வாங்கி, இரண்டாம் கங்கை என முடி சூடி
நின்றார் - இரண்டாவது கங்கை ஒன்றினைச் சூடியதுபோல முடியின்கண்
சூடி நின்றனர்.
எல்லா
முழு முதன்மையுமுடைய இறைவன் பாண்டியன் அளித்த
ஆடையைத் தாழ்ந்து நின்று வாங்குவரோ என்னும் ஆசங்கையைப்
பரிகரித்தற்கு ஒரு பாணனுக்கும் ஏவல் செய்தவர் அரசன்பால் இதனை
|