தன்னைச்சூழ, ஏதிலார்
நகையும் சூழ - பகைவர் நகையும் சூழ, துஞ்சின
மறமும் சூழ - வீரமின்மையுஞ்சூழ, சோழனும் உடைந்துபோனான் -
சோழனுந் தோற்றுப்போயினான்.
வீரம்
சிறிதுமின்றி என்பார் துஞ்சின மறமுஞ்சூழ என்றார். சோழனும்
என்னும் உம்மை எச்சப்பொருட்டு; ஏனைய எண்ணும்மை. (41)
வில்லொடு மேக மன்ன வெஞ்சிலை வேட வேந்தன்
மல்லொடு பயின்ற தென்னன் மலர்முகச் செவ்வி நோக்கி
அல்லொடு மதிவந் தென்ன வருணகை சிறிது பூத்துச்
செல்லொடு பகைபோற் கொண்ட திருவுரு மறைந்து போனான். |
(இ
- ள்.) வில்லொடு மேகம் அன்னவெஞ்சிலைவேட வேந்தன் -
வில்லோடு கூடிய முகில்போன்ற கொடிய வில்லையுடைய வேட மன்னன்,
மல்லொடு பயின்ற தென்னன் - மற்போரிற் பயின்ற பாண்டியனது, மலர்முகச்
செவ்வி நோக்கி - தாமரை மலர்போன்ற முகத்தின் பொலிவைப் பார்த்து,
அல்லொடு மதி வந்தென்ன - இருளோடு சந்திரன் வந்தாற்போல,
அருள்நகை சிறிது பூத்து - அருளோடு கூடிய புன்னகை சிறிது அரும்பி,
செல்லொடு பகைபோல் கொண்ட - இடியுடன் பகை கொண்டாற்போலக்
கொண்ட, திருஉரு மறைந்துபோனான் - திருவுருவம் மறைந்தருளினான்.
வேட
நம்பியின் கரிய உடலுக்கும் வில்லுக்கும் முறையே மேகமும்
இந்திர வில்லும், மற்றும் அவ்வுடற்கும் நகையொளிக்கும் இருளும் மதியும்
உவமைகளாயின. முன்பு மேகம் கூறப்பட்டமையின் செல் என்பதற்கு இடி
என்று பொருள் கூறப்பட்டது. அச்சம் விளைக்கும் உரு என்பது கருத்தாகக்
கொள்க. (42)
பாடுவா யளிதே னூட்டும் பைந்தொடைச் செழியன் வென்றிக்
கோடுவாய் வைத்திட் டார்த்துக் குஞ்சர முகட்டி லேறித்
தோடுவாய் கிழிக்குங் கண்ணார் மங்கலந் துவன்றி யேந்த
நீடுவார் திரைநீர் வேலி நீண்மதி னகரிற் புக்கான். |
(இ
- ள்.) பாடு அளிவாய் தேன் ஊட்டும் பைந்தொடைச் செழியன் -
இசை பாடும் வண்டுகளின் வாயில் மதுவை ஊட்டும் பசிய மாலையை
யணிந்த பாண்டியன், வென்றிக் கோடுவாய் வைத்திட்டு ஆர்த்து - வெற்றிச்
சங்கை வாயில் வைத்து முழக்கி, குஞ்சர முகட்டில் ஏறி - யானையின்
மத்தகத்தில் ஏறி, தோடுவாய் கிழிக்குங் கண்ணார் - தோட்டின் வாயைக்
கிழிக்குங் கண்ணையுடைய மகளிர், மங்கலம் துவன்றி ஏந்த - நெருங்கி
அட்ட மங்கலங்களையும் ஏந்த, நீடுவார் திரைநீர் வேலி - நீண்ட பெரிய
அலைகளையுடைய நீரையே வேலியாகவுடைய, நீண்மதில் நகரில் புக்கான் -
நீண்ட மதிலாற் சூழப்பட்ட நகரின்கட் சென்றனன்.
|