நரி பரியாக்கிய படலம்301



     (இ - ள்.) ஏனை மந்திரரும் தத்தம் இல்புக - மற்றைய
அமைச்சர்களுந் தந்தம் வீட்டிற்குச் செல்ல, புரவி பார்த்த மாநகராரும்
தத்தம் மனைபுக - குதிரைக் காட்சியைக் காணவந்த பெரிய நகரமாந்தரும்
தந்தம் மனையிற் செல்ல, பரியின் பாகர் ஆனவர் தாமும் - குதிரை
வீரராகிய இறைவரும், கோயில் அடைந்து - திருக்கோயிலை அடைந்து, தம்
விளையாட்டு எல்லாம் - தமது திருவிளையாடல் அனைத்தும், மீன்
நெடுங்கண்ணினாட்கு விளம்பினர் இருந்தார் - மீன்போன்ற நீண்ட
கண்களையுடைய அம்மையாருக்குக் கூறியிருந்தருளினார்.

     ஏனைமந்திரர் - வாதவூரரை யொழிந்த அமைச்சர்கள். பாகரானவர் -
பாகராய் வந்தவர். தாம், அசை. மீனெடுங் கண்ணினாள் -
அங்கயற்கண்ணம்மை. விளம்பினர், முற்றெச்சம். (127)

                      ஆகச் செய்யுள் 2, 925